Lyrics
Naalidhuve Nan Naalidhuve Lyrics
நாளிதுவே நன் நாளிதுவே
கண்மணி பிறந்த நாளிதுவே
ஆசி தந்திட வாருங்கள்
மங்களமாய் என் நாளும் வாழவே...(நாளிதுவே)
மின்னிடும் ஸ்வர்ணப் பதுமையடி
மாமதி நிகர் எழில் வதனமடி
வானில் உலாவும் கோகிலமே நீர்
இன்னிசை கானமும் பாடிடுவீரே...(நாளிதுவே)
வெண்ணொளி வீசிடும் பால் கடலிலே
நீராடி வரும் சந்திரனைக் கண்டே
அழகினில் அவன் தனக்கிணையாகா என
பெருமை கொண்டிடும் பாவை பிறந்த (நாளிதுவே)
People
Related People
3 people