Song lyrics

Mottu Onru Lyrics

யார் சொல்வதோ பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Deva
Year
2000
Singers
Hariharan, Sadhana Sargam
Lyricist
Vairamuthu
Mottu Onru

Lyrics

Mottu Onru Lyrics

யார் சொல்வதோ யார் சொல்வதோ
யார் சொல்வதோ யார் சொல்வதோ

மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா

கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்
அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா

யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ

மேகம் என்பது அட மழை முடிச்சு
காற்று முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும்

காதல் என்பது இரு மன முடிச்சு
கண்கள் முட்டினால் அவிழ்ந்துக்கொள்ளும்

மேகங்கள் முட்டிக்கொள்வதாலே
சண்டை என்று பொருள் இல்லை

தேகங்கள் முட்டிக்கொள்வதாலே
ஊடல் என்று பொருள் இல்லை

இதழ்கள் பொய் சொல்லும்
இதயம் மெய் சொல்லும்
தெரியாதா உன்மை தெரியாதா

காதல் விதை போல மௌனம் மண் போல
முளைக்காதா மண்ணை துளைக்காதா

யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ

பனிக்குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால்
உயிர் ஜனிக்கும் உயிர் ஜனிக்கும்

ஹோ மௌன குடங்கள் மெல்ல உடைந்துவிட்டால்
காதல் பிறக்கும் காதல் பிறக்கும்

உள்ளத்தை மூடி மூடி தைத்தால்
கலை இல்லை காதல் இல்லை

உள்ளங்கை போலே உள்ளம் வைத்தால்
பயம் இல்லை பாரம் இல்லை

நாணல் காணாமல் ஊடல் கொண்டாலும்
நனைக்காதா நதி நனைக்காதா

கமலம் நீரோடு கவிழ்ந்தே நின்றாலும்
திறக்காதா கதிர் திறக்காதா

யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ

மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்
முட்டும் தென்றல் தொட்டு தொட்டு திறக்கும்
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா
அது மலரின் தோல்வியா இல்லை காற்றின் வெற்றியா

கல்லுகுள்ளே சிற்பம் தூங்கி கிடக்கும்
சின்ன உளி தட்டி தட்டி எழுப்பும்
அது கல்லின் தோல்வியா இல்லை உளியின் வெற்றியா

யார் சொல்வதோ யார் சொல்வதோ
பதில் யார் சொல்வதோ யார் சொல்வதோ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people