Song lyrics

Nani Koni Rani Lyrics

நாணி கோணி ராணி பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Harris Jayaraj
Year
2012
Singers
Harris Jayaraj, Shreya Ghoshal, Vijay Prakash, Viveka
Lyricist
Viveka
Nani Koni Rani

Lyrics

Nani Koni Rani Lyrics

ஏ நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்

யேகோவா
நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்

மருதாணி பூத்த காணி உன்னை
தா நீ என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்

யேகோவா

நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா

அ நாணி கோணி ராணி எந்தன்
மேனி ஏனோ மொய்க்கிறாய்
மருதாணி பூத்த காரி என்னை
தா நீ என்று கேட்கிறாய்

நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தா பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்

நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாராய் பாராய் நான் உன்னால் ஆனேன் வேறாய்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா

ஒரு காலை நேரம் நீ வந்தாலே
பனி வீசும் காற்றுக்கு
பணியாமல் தேகம் சூடேறும்

கண் பேசும் மௌனமே ஒன்றாக
நாம் போகும் சாலைகள்
முடியாமல் எங்கெங்கோ நீளும்

நதியிலே இலை போல பயணம்
இனிப்பான தருணம்
மனதோடு மாய மின்சாரம்

உன் எதிரில் நனையாமல் கரைந்தேன்
நகராமல் உறைந்தேன்
மெதுவாக மெதுவாக உனதாகிறேன்
உயிரே உயிரே உயிர் போக போக தொடு

நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த காணி உன்னை
தா நீ என்று கேட்கிறேன்

நீ தூரம் நின்றால் வேற்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்

தொலை தூரம் போனதே என் மேகம்
புரியாத மென் சோகம்
உயிர் மேலே ஊசி இறக்கும்

ஹோ பிரிவாலே இன்று நான் போராட
விழியோரம் நீரோட
அவன் கண்ணில் காதல் மயக்கம்

உன்னழகை வெளிக்காட்டும் சாரலில்
எனைப் போல சாயலில்
ஒரு ஜீவன் தீண்டக் கண்டேனே

நெஞ்சினிலே புரியாத ஆதங்கம்
மெலிதான பூகம்பம்
இருந்தாலும் விழியோரம் சிறு ஆனந்தம்
இதயம் இதயம் சுகமாக ஏற்கும் இனி

நாணி கோணி ராணி உந்தன்
மேனி நானும் மொய்க்கிறேன்
மருதாணி பூத்த காணி உன்னை
தா நீ என்று ஏல லா

நீ தூரம் நின்றால் வேர்க்கிறேன்
என் பக்கம் வந்தால் பூக்கிறேன்
ஓர் ஏவல் ஆளாய் மாறினேன்
என்னை எங்கே என்று தேடினேன்
ஏலே லா

நீராய் நீராய் நீ மேகம் தாண்டி வாராய்
தாராய் தாராய் என் தாகம் தூண்டி நூறாய்
பாவாய் பாவாய் நான் உன்னால் ஆனேன் தீவாய்
கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா.
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people