Song lyrics

Boy Frienda Lyrics

பாய் பிரெண்டை பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Deva
Year
1999
Singers
Mano, Sujatha Mohan
Boy Frienda

Lyrics

Boy Frienda Lyrics

பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு நிலவே என் நிலவே
பார்த்து ரொம்ப நாளானதே நிலவே என் நிலவே
அவன் நடையோ தனியழகு உடையோ தனியழகு
அப்படியோர் ஆணழகு ஆயிரத்தில் ஓரழகு

 பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான் நிலவே சொல் நிலவே
பாவம் என்னை பார்க்கவில்லையே நிலவே கேள் நிலவே
அவள் நடிப்பாள் தனியழகு துடிப்பாள் தனியழகு
ஊடலிலே ஓரழகு கூடலிலே நூறழகு

பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு நிலவே என் நிலவே

உன் வாலிபம் பொல்லாதது
உன் விழியினில் தடுக்கி விழுந்துவிட்டேன்
நீ உதவ வரவில்லையே

உன் மோகனம் பொன்னானது
நீ விழுந்ததும் எடுத்து மடியில் வைத்தேன்
நீ உனது வசம் இல்லையே

எனக்கென்றே தனியாக ஸ்வாசங்கள் கிடையாது
இருவருக்கும் உயிர்காற்று ஒன்றேதான் எனும்போது

இந்த உறவுகள் உடையாது
இதை உடைப்பவன் கிடையாது
இங்கு இரவுகள் ஆனால் விரகங்கள் நமது இதயத்தை குடையாது

பாய் பிரெண்டை பார்த்தால் வரச்சொல்லு நிலவே என் நிலவே

பாவம் என்னை பார்க்கவில்லையே நிலவே கேள் நிலவே

சந்திரோதயம் சூர்யோதயம்
உன் இருவிழி கொடுத்த இரவல்களோ என உலகம் நினைக்கின்றதே

சந்தோஷமும் சங்கீதமும்
நீ மருவிட விளையும் அருவிகளோ என் மனது நினைக்கின்றதே

நாம் இதுபோல் தினம்தோறும் நனைந்தபடி இருப்போமா
நான் யாரோ நீ யாரோ நமை நாமே மறப்போமா

உன் விரல் நகம் படும்போது
இந்த விண்ணுக்கு வலிக்காது
எனை தொட இனிமேல் நீ தினசரி மீட்டு எனக்கது சலிக்காது

பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான் நிலவே சொல் நிலவே
பாவம் என்னை பார்க்கவில்லையே நிலவே கேள் நிலவே

அவன் நடையோ தனியழகு உடையோ தனியழகு
அப்படியோர் ஆணழகு ஆயிரத்தில் ஓரழகு

பாய் பிரெண்ட் தான் பக்கம் வந்தான் நிலவே சொல் நிலவே

பார்த்து ரொம்ப நாளானதே நிலவே என் நிலவே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people