Song lyrics

Naan Atchi Seithuvarum Lyrics

நானாட்சி செய்து வரும் பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
K. V. Mahadevan
Year
1971
Singers
P. Susheela
Lyricist
Kannadasan
Naan Atchi Seithuvarum

Video

Naan Atchi Seithuvarum

Lyrics

Naan Atchi Seithuvarum Lyrics

பெண் : { நானாட்சி
செய்து வரும் நான்மாட
கூடலிலே மீனாக்ஷி
என்ற பெயர் எனக்கு } (2)

பெண் : { கங்கை நீராட்சி
செய்து வரும் வடகாசி
தன்னில் விசாலாக்ஷி
என்ற பெயர் வழக்கு } (2)

பெண் : { கோனாட்சி
பல்லவர்தம் குளிர்சோலை
காஞ்சி தன்னில் காமாக்ஷி
என்ற பெயர் எனக்கு } (2)

பெண் : { கொடும்
கோலாட்சி தன்னை
எதிர்க்கும் மாரியம்மன்
என்ற பெயர் கொண்டபடி
காட்சி தந்தேன் உனக்கு } (2)

பெண் : { ஆறென்றும்
நதியென்றும் ஓடை
என்றாலும் அது நீரோடும்
பாதை தன்னை குறிக்கும் } (2)

பெண் : { நிற்கும் ஊர்
மாறி பேர் மாறி கரு
மாறி உரு மாறி ஒன்றே
ஓம் சக்தியென உரைக்கும் } (2)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people