Song lyrics

Konjam Neram Lyrics

கொஞ்ச நேரம் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Vidyasagar
Year
2005
Singers
Asha Bhosle, Madhu Balakrishnan
Lyricist
Yugabharathi
Konjam Neram

Lyrics

Konjam Neram Lyrics

(இசை)

பெண்:
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா?
அந்த நேரம் அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா?

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா?
அந்த நேரம் அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா?

ஆண்:
கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம்
எல்லை மீறக் கூடாதா? ஆ ஆ
இந்த நேரம் இன்ப நேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா? ஆ

பெண்:
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா?
அந்த நேரம் அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா?
(இசை)

பெண்: கண்ணு ஓரழகு கையி நூறழகு
பொன்னால் பூமி அழகே
ஆண்: உன்னில் நானழகு என்னில் நீயழகு
நம்மால் யாவும் அழகே
பெண்: ஓ கண்ணதாசன் பாடல்வரி போல
கொண்ட காதல் வாழும் நிலையாக
ஆண்: கம்பன் பாடிப் போன தமிழ்ப் போல
எந்த நாளும் வேகம் நலமாக
பெண்: மழை  நீயாக வெயில் நானாக
வெள்ளாமை இனி ஆ... ஆ... ஆ...

ஆண்:
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா?
அந்த நேரம் அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா?
(இசை)

ஆண்: கொக்கிப் போடும் விழி
கொத்திப் போகும் இதழ் நித்தம் கோலமிடுமா?
பெண்: மக்கள் யாவரையும் அன்பில் ஆளுகிற
உன்னைப் போல வருமா?
ஆண்: வெளி வேஷம் போடத் தெரியாமல்
எனதாசை கூட தடுமாறும்
பெண்: ஹ்ஹும் பல கோடி பேரின் அபிமானம்
உனக்காக ஏங்கும் எதிர்காலம்
ஆண்:நீ என் நாடு நான் உன்னோடு மெய் தானே இது ஆ... ஆ... ஆ...

பெண்:
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா?
அந்த நேரம் அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா?

ஆண்:
கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம்
எல்லை மீறக் கூடாதா?
பெண்:
இந்த நேரம் இன்ப நேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா? ஆ ...
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

8 people