Song lyrics

Nee Vandhu Ponadhu Lyrics

நீ வந்து போனது பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Harris Jayaraj
Year
2014
Singers
Bombay Jayashree, KK, Ramya NSK
Lyricist
Thamarai
Nee Vandhu Ponadhu

Lyrics

Nee Vandhu Ponadhu Lyrics

நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண் பனி மூட்டத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை

என் வானம் தேடிய வானவில்லை
என் காது ஏங்கிய வாழ்த்து சொல்லை
நீ தந்த நேரத்தில்
காற்றில் கூட அசைவில்லை

சொப்பனம் கண்டபின் கண்ணை காணாம்
சொல்லிய வார்த்தையில் மொழியை காணாம்
கற்பனை செய்தபின் காண நீ இல்லையே

கந்தக பூமியில் மேகம் ஆனாய்
கற்கண்டு மாமழை தந்து போனாய்
என் உயிர் வாழ்ந்திடும் நேரம் உன் கையிலே

ஓ நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண் பனி மூட்டத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை

திங்கள் செவ்வாய் என்றே நகரும்
என்னாள் என்று இன்பம் நுகரும்
நான் கண்டேன் என் மரணம்

நஞ்சை உண்ணும் தொண்டை கமரும்
பஞ்சை பற்றி செந்தீ பரவும்
ஒஹ்….. எங்கே என் அமுதம்

திரை சீலைகள் இல்லாத
என் ஜன்னல் ஊடாக தேடினேன்
வெளி ஓசைகள் இல்லாமல்
வாய்க்குள்ளே உன் பாடல் பாடினேன்
எனை உன் உள்ளங்கை மீது
நீ தாங்கிதாலாட்ட ஆடினேன்

சாகாவரம் நீ தந்ததால் நான் வாழ்கிறேன்

நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னை தேடியும் காணவில்லை
வெண் பனி மூட்டத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை

விண்ணை விட்டு செல்லும் நிலவே
பெண்ணை கண்டு நின்றால் நலமே
ஒஹ்… இங்கே
நான் தனியே…
முன்னும் பின்னும் முட்டும் அலையே
எங்கே எங்கே எந்தன் கரையே
நீ சொன்னால் சேர்ந்திடுவேன்

கடை கண்ணாலே நீ பார்த்தா
பார்வைகள் போதாமல் யேங்கினேன்
சிறு ஓசைகள் கேட்டாலும்
நீ தானோ என்றே நான் தேங்கினேன்
வெறும் பிம்பத்தை நீ என்று
கை நீட்டி ஏமாந்து போகிறேன்
கள்ளம் இல்லா வெள்ளை நிலா நீதானடி

நீ வந்து போனது நேற்று மாலை
நான் என்னை தேடியும் காணவில்லை

வெண் பனி மூட்டத்தின் போர்வையாக
எங்கும் வெள்ளை

என் வானம் தேடிய வானவில்லை
என் காது ஏங்கிய வாழ்வின் சொல்லை

நீ தந்த நேரத்தில்
காற்றில் கூட அசைவில்லை.
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

9 people