Song lyrics

Endha Pakkam Lyrics

எந்தப்பக்கம் காணும்போதும் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Yuvan Shankar Raja
Year
2016
Singers
Chinmayi, Rahul Nambiar
Lyricist
Vairamuthu
Endha Pakkam

Video

Endha Pakkam

Lyrics

Endha Pakkam Lyrics

எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று     
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு     
ஒரு காதல் தோல்வி காணும் போதும் காதல் உண்டு     
சிறு கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு     
அட ரோஜாப்பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும்     
என் ராஜாபையன் நீ அழுதால் அதில் யானம் மிஞ்சும்     
உன் சோகம் ஒரு மேகம்     
நான் சொன்னால் அது போகும்   
உன் கண்ணீர் ஏந்தும் கண்ணம் நான் ஆகும்      (எந்த)
     
எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது     
எப்போதுமே பகலாய் போனால்     
வெப்பம் தாங்காதே     
மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் நதிதான்      
உன் உயிரை சலவை செய்ய     
ஒரு காதல் நதி உண்டு     
உன் சுவாசப்பையை மாற்று     
அதில் சுத்தக்காற்றை ஏற்று     
நீ இன்னோர் உயிரில்      
இன்னோர் பெயரில் வாழ்ந்துவிடு…… ஓ…     
     
ஹோ…… ஹோ…… ஹோ……     
     
சந்தர்ப்பமே தீமை செய்தால் சந்தோஷமே ஏது     
சல்லடையில் தண்ணீர் அள்ளி தாகம் தீராது     
தாகம் தீரத்தானோ நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்     
நம் உறவின் பெயரே தெரியாதம்மா     
உயிரைத் தருகின்றாய்      
உன் உச்சந்தலையைத் தீண்ட     
ஓர் உரிமை உண்டா பெண்ணே     
உன் உள்ளங்காலில் தலையை சாய்த்தால் போதும் கண்ணே…     
ஓ……… ஓ………… ஹோ………      (எந்த)

எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று     
நீ எந்தப்பாதை ஏகும்போதும் ஊர்கள் உண்டு
நீ தாவித்தாவித் தாவும்போதும் தாய்மை உண்டு
நான் நெஞ்சாங்கூட்டில் சாயும்போதும் நேர்மை உண்டு
உன் வார்த்தைக்கு முன்னால் என் வாழ்வே உன் பின்னால்
உன் சோகம் ஒரு மேகம்     
நான் சொன்னால் அது போகும்   
உன் கண்ணீர் ஏந்தும் கண்ணம் நான் ஆகும்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

9 people