Song lyrics

Unn Perai Sollum Pothe Lyrics

உன் பேரை சொல்லும் போதே பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Vijay Antony
Year
2010
Singers
Haricharan, Naresh Iyer, Shreya Ghoshal
Lyricist
Na. Muthukumar
Unn Perai Sollum Pothe

Video

Unn Perai Sollum Pothe

Lyrics

Unn Perai Sollum Pothe Lyrics

ஆண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …

பெண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழதானே உயிர் வாழும் போராட்டம்
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
(இசை)

ஆண்:
நீ பேரழகில் போர் நடத்தி என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்
பெண்:
நான் பெண்ணாக பிறந்ததற்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்
ஆண்:
என் உலகம் தனிமை காடு, நீ வந்தாய் பூக்களோடு
எனை தொடரும் கனவுகளோடு, பெண்ணே பெண்ணே …

பெண்:
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
ஆண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
பெண்:
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
ஆண்:
உன் அன்பில் கண்ணீர் துளி ஆவேன் …
பெண்:
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
ஆண்:
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …
(இசை)

ஆண்:
உன் கருங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உரையாடித்தான் ஜென்மம் தீரும்
பெண்:
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்
ஆண்:
உன் காதல் ஒன்றைத் தவிர, என் கையில் ஒன்றும் இல்லை
அதைத் தாண்டி ஒன்றும் இல்லை,பெண்ணே பெண்ணே

நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் …

ஆண் பெண் இருவரும்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழை ஆவேன் ஓ…
உன் அன்பில் கண்ணீர்த் துளி ஆவேன் …
நீ இல்லை என்றால் என் ஆவேன் ஓ…
நெருப்போடு வெந்தே மண் ஆவேன் … 

(இசை)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people