லாவெண்டர் நேரமே பாடல் வரிகள்

Last Updated: Jan 27, 2025

Movie Name
Kadhalikka Neramillai (2025) (காதலிக்க நேரமில்லை)
Music
A. R. Rahman
Year
2025
Singers
Adithya RK, Alexandra Joy
Lyrics
லாவெண்டர் நேரமே
நீகழா நொடியில்
மலரும் நான்
முகரா நொடியில்
விரவும் நீயோ

லாவெண்டர் நேரமே
நகரும் நாழி
கனவின் ஆழி
துயிலா தீவோ
மாயத்தின் காந்தமே
மின்னல் உண்டாக்குதே
டோபமின் தூறலே
நெஞ்சுக்குள் பாயுதே

ஓ.. ஆழ்நிலையில்
ஒரு போர் நிகழும்
இரவோ இரவோ இரவோ,
இது காதலின் துறவே
எரி நிலையோ
காதல் மிகும் பொழுதோ

லாவெண்டர் பூக்களே
பாதைகள் நீலுமோ
சொல்லாத காதல் மேல்,
செவ்வானம் மோதுமோ

என் கண்ணின் புன்னகையே
உன் பார்வை ஏய்க்குமோ
மே அன்பின்மௌனமே
நம் காதல் வெப்பமோ

காலத்தை திண்பதே
காதலின் வேட்க்கையோ சொல்
இதயத்தின் நெகிழ் நொடி நேராதோ
ஸ்பரிசத்தில் உயிர்கனல் பூக்காதோ
கவிதைகள் சொல்லா வழிகளிலே
நீந்திடும் உயிர் விடை காணாதோ

லாவெண்டர் பூக்களே
என் கூந்தல் காட்டில் மறைகிறேன்
லாவெண்டர் வாசமே
என் தூது நீ

நகரும் நிழல்கள் எல்லாம் இருளில்
என் முகச்சிவப்பை ரசித்திருக்க
ஜன்னலில் தொடரும் பிறை நிலவும்
நம் நிலை கண்டே சிரித்திருக்க
புதிர் பயணம் தானோ

தத்தை தமிழ் தவிப்பில்
சிறையாகிட
சித்தம் தினருகிறேன் தனலாகி
கொதித்தேன் நான் ஆணேன் ஆணே

ஓ ஓ பித்தம் தலைக்கேறி
சிதறுகிறேன்
சத்தம் தெறிக்காமல் கதறினேன்
தர்க்கம் செய் மௌனம் தீராதோ… பெண்ணே.

இது காதல் என்றால் பொய்யா
அது இல்லை என்றால் மெய்யா
இந்த காதல் விடுகதை வேர்சொல்

லாவெண்டர் காலமே
இனியவை சொல்வாயோ
இசை இன்னும் சேர்ப்பாயோ
இருக்கங்களே இளகிடுமோ

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.