Soul of Varisu பாடல் வரிகள்

Last Updated: Jan 28, 2025

Movie Name
Varisu (2023) (வாரிசு)
Music
S. Thaman
Year
2023
Singers
K. S. Chithra
Lyrics
Vivek (lyricist)
ஆராரிஆராரோ கேட்குதம்மா
நேரில் வந்தது என் நிஜமா
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா

பிள்ளை வாசத்தில் ஆசைகள்
தோரணம் சூடுதம்மா
நெஞ்சம் ஆனந்த மேகத்தில்
ஊஞ்சலும் ஆடுதம்மா

என் உயிரில் இருந்து
பிரிந்த பகுதி இங்கே
நான் இழந்த சிரிப்பும்
இதய துடிப்பும்
மீண்டும் இங்கே

இந்த நொடி நேரம்
என்னுயிரில் ஈரம்
கண்ணெதிரில் காலம்
நின்று விடுமா

என் இதழின் ஓரம்
புன்னகையின் கோலம்
இந்த வரம் யாவும்
தங்கி விடுமா

பால் முகம் கானவே
நான் தவித்தேன்
இன்று நீ வர கேட்டதேன்
ஆரோ!
கால் தடம் வீழவே
நான் துடித்தேன்
உனை தாய் மடி ஏந்துதே
தாலோ!

இந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம். உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.