Lyrics
Makara Veenai Lyrics
மகர வீணை தனது மதுர
நாத மகிமை அறியுமோ
நாத மகிமை அறியுமோ...
வளமை கொழிக்கும் பூமியின் மணம்
வான மழைக்கு தெரியுமோ...(மகர)
மதுவை உண்ட வண்டின் மனது
மலரின் நெஞ்சம் அறியுமோ..அறியுமோ...
மங்கை எந்தன் நெஞ்சத் துடிப்பை
அவரும் அறிய முடியுமோ.....
நன்மை தீமை அறிந்திடாமல்
நான் மயங்கிடும் போதிலே
தூய வழி காட்டிட ஒரு
சோதரன் வந்தான்........(மகர)
People
Related People
1 people