Song lyrics

Penne Kadhal Lyrics

பெண்ணே காதல் வலி பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Deva
Year
2002
Singers
KK
Lyricist
Vaali
Penne Kadhal

Lyrics

Penne Kadhal Lyrics

பெண்ணே காதல்
வலி என்னவென்று
பார்த்ததுண்டோ டி
கண்ணால் கண்ணீர்
துளி எந்த நாளும்
பார்த்ததுண்டோ டி

பெண் என்றால்
ஆணுலகம் கவிதை
என்கிறதே கவிதை ஓர்
கை வாளாய் ஆளை
கொள்கிறதே

பெண்ணே
காதல் வலி என்னவென்று
பார்த்ததுண்டோ டி

உண்மையில் நீ
பூ பந்தோ ஓஓ ஊர்
எரிக்கும் தீ பந்தோ ஓஓ
ஆணின் நெஞ்சம்
அம்மம்மா ஓஓ நீ
அடிக்கும் கார் பந்தோ

பெண்ணே காதல்
வலி என்னவென்று
பார்த்ததுண்டோ டி

உன் மீது காதல்
வைத்து உயிர் உனக்கு
என்றான் ஹோ அம்மா
நீ எய்தும் கூட அதை
பொறுத்து நின்றான்

உந்தன் மீது
குற்றம் ஏதும் விழாமல்
செய்தான் உள் மனதில்
கண்ணீர் வெள்ளம்
விடாமல் பெய்தான்

கை அணைத்து
கையை கழுவ வந்தாயோ
பெண்ணே காலகாலம்
ஆணின் பாவம் வாராதோ
பெண்ணே

பெண்ணே
காதல் வலி என்னவென்று
பார்த்ததுண்டோ டி

விட்டதை மீண்டும்
பெற விரும்பிடுதோ நெஞ்சம்
ஹோ தொட்டதை மீண்டும்
தொட்டு தொடர்கின்றதோ
எண்ணம்

பொத்தி பொத்தி
வைத்தால் கூட பொல்லாத
காதல் எந்த நேரம் என்ன
செய்யும் சொல்லாது
காதல்

கத்தி கூட காதல்
போல கொல்லாது
பெண்ணே காய பட்ட
பின்னால் ஞானம்
உண்டாச்சோ கண்ணே

காதல் காலாவதி
காரணம் யார் சொல்லடி
அம்மா கண்ணில் கண்ணீர்
நதி காரணம் யார் சொல்லடி
அம்மா

உன்னாலே ஓர்
நிஜமே நிழலாய்
போகிறதே அம்மம்மா
ஓர் இதயம் தழலாய்
வேகிறதே

காதல் காலாவதி
காரணம் யார் சொல்லடி
அம்மா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people