Lyrics
Oor Ooraga Pogum Lyrics
ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு
உள்ளுக்குள்ள தவிக்கும் இந்த மனசு
உன்ன விட்டு வேறெங்கும் போகாது என் ராசாவே
செக்கு மாடு போல சுத்தி சுத்தி ஆடும்
உன்ன விட்டு வேறெங்கும் போகாது என் ராசாவே
உன்ன விட்டு வேறெங்கும் போகாது
ஏதோ ஒரு மூலையிலே ஏங்கும் உசுரு
வீணாக என் ஒடம்ப தாங்கும் உசுரு
காரணம் கேளு அது பாடுது பேரு
தேர் ஒண்ணு காத்திருக்கு ஊர்வலத்துக்கு
உன்னுடன் தானா இல்லை நான் மட்டும் தானா
வேதம் கேட்கும் காதுக்குள்ளே ஏழை நாதம் கேட்காதா
மாதம் தேதி நாட்கள் எல்லாம் இன்று நியாயம் கூறாதா
காட்டுல வரையில ஆத்துல வயலுல நீதானே
அலையிற மனசுக்கு ஆறுதல் தருவது நீதானே நீதானே (ஊர்)
தோளில் கருகாமணி விம்மி ஆடுது
தூங்காத கண்ணு மணி ஒன்ன தேடுது
நான் படும் பாடு அதை யார் அறிவாரோ
நாடோடிப் பாட்டு ஒண்ணு யாரத் தேடுது
நீ போகும் பாத அதத்தான் தேடுது
நீ இல்லாத ஊர் கொண்டாடும் நாளும் எனக்கு திருநாளா
காப்புக் கட்டி கரகம் ஆட அம்மன் அருளைத் தருவாளா
சேத்துல நான் நட நாத்துல தெரிவது நீதானே
காத்துல மழையில அனுதினம் தொடுவது நீதானே நீதானே (ஊர்)
People
Related People
4 people