Song lyrics

Kolakiliye Kolakiliye Lyrics

கோலக் கிளியே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
2000
Singers
S. P. Balasubramaniam
Lyricist
R. V. Udayakumar
Kolakiliye Kolakiliye

Lyrics

Kolakiliye Kolakiliye Lyrics

பாதம் பட்டா நோகாதா எம் பச்சக் கிளியே...
வெயில் பட்டா வாடாதா என் வாச மல்லியே...
ரோசாப் பூவே ராசாத்தி ராசா நான்தான் தேரோட்டி ஆ..ஆ..

கோலக் கிளியே கோலக் கிளியே
கூடவே நீயும் வா வா
மாலைப் பொழுதில் கூவும் குயிலே
மயக்கம் ஏன் மயிலே வா வா
மனசுல நீதான் இருக்கே ராகமா
உயிரில கலந்தே படிப்பேன் கேளம்மா
வெயிலிலே நிலவொண்ணு நடப்பது நியாயம்தானா(கோலக்)

முத்துக் குளிச்சு முத்து ஒண்ணு எடுத்தா
முல்லைச் சிரிப்பில் போட்டி ஒண்ணு நடக்கும்
ஒத்து ஒத்து முத்தினமே ஓரம் ஓரம்
பட்டு மொகத்த வானத்துல பதிச்சா
நட்சத்திரங்கள் பட்டிமன்றம் நடத்தும்
எட்டி நில்லு வெண்ணிலவே தூரம் தூரம்

ஆடிடும் துளசிப் பூவே
கண்ணன் உன்னை மறந்தானா
அர்ச்சனைக்கு நீயும் போனால்
வேண்டும் வரம் தருவானா
காத்தக் கேளு தாயி ஒன்னப் பத்தி பாடும்..(கோலக்)

பாட்டுப் படிக்க பட்டு இதழ் திறந்தா
கத்தும் குயிலும் ரெக்க கட்டி பறக்கும்
குக்குக்கூ என்னத்துக்கு வேணா வேணா
தங்கச் சிலையும் கோயிலுக்குள் நடந்தா
சிற்பங்களுக்கும் ஜென்மம் வந்து பிறக்கும்
சித்திரமே உத்தரவு வேணும் வேணும்

வாணியே வானவர் மகளே
கேட்கும் வரம் தருவாயா
உனக்கு நான் சேவை செய்ய
பல பிறவி கொடுப்பாயா
தெய்வம் போல நீயே காவல் தெய்வம் நானே..(கோலக்)

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people