Song lyrics

Munthanaiya Naan Pudichen Lyrics

முந்தானைய நான் புடிச்சேன் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Deva
Year
1993
Singers
Mano
Lyricist
Kalidasan
Munthanaiya Naan Pudichen

Lyrics

Munthanaiya Naan Pudichen Lyrics

முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல
முட்டாளுன்னு பேரெடுத்தேன் நெஞ்சம் கேக்கல
அவ கொஞ்சம் பாக்கல

உத்தமிதான் தெனம் அன்பு வச்சா
மத்தியில ஒரு வம்ப வெச்சா
ஞாயந்தானா அது மாயந்தானா சொல்லுங்க
ஞாயந்தானா தாய்க்குலமே மாயந்தானா

முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல

லட்டு லட்டு ஒரு சிட்டு சிட்டு
அத தேடிப் புடிச்சேன்
முல்ல மொட்டு மொட்டு அத தொட்டுத் தொட்டு
மனம் வாடித் தவிச்சேன்

பட்டு பட்டு தெனம் கெட்டு கெட்டு
ஒரு பாடம் படிச்சேன்
இப்ப பட்ட முதல் அந்த பாரீன் வரை
ரெண்டு பாட்டில் அடிச்சேன்

பொல்லாத ஆசையினாலே...ஹே ஹே
பொல்லாத ஆசையினாலே
பொண்ணோட பேச்சை நம்பி
இல்லாத ஊருக்குத்தானே
எல்லோரும் போறோம் தம்பி

சம்சாரம்தான் புளிச்சுப் போச்சு
சன்யாசம் தான் புடிச்சுப் போச்சு
இன்னும் என்ன எடத்த மாத்து
எல்லாம் இங்கே படுதா போத்து

முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல..

முத்து முத்தா நல்ல கொத்து கொத்தா
அவ பூத்து சிரிச்சா
அந்த முத்துக்குள்ள ஒரு சொத்தையத்தான்
கண்ணில் மூடி மறைச்சா

செட்டு செட்டா வெள்ளித் தட்டு தட்டா
அவ சீரு கொடுத்தா
அந்த தட்டு என்ன கை சுட்டதுன்னு
கெட்ட பேரு எடுத்தா

மல்லாக்க படுத்துப் பார்த்தேன்..ஓஓஓ
மல்லாக்க படுத்துப் பார்த்தேன்
மவுண்ட் ரோடு வெறிச்சுப் போச்சு
என் வீட்டில் வெளக்கு போட்டேன்
எதிர் வீடு வெளிச்சம் ஆச்சு

பொண்டாட்டின்னா புருஷன் ஒண்ணு
என் வீட்டுல இன்னொரு கண்ணு
என்ன கத புரியலயின்னு
ஒத்தையில தவிக்கிறேன் நின்னு

முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல
முட்டாளுன்னு பேரெடுத்தேன் நெஞ்சம் கேக்கல
அவ கொஞ்சம் பாக்கல

உத்தமிதான் தெனம் அன்பு வச்சா
மத்தியில ஒரு வம்ப வெச்சா
ஞாயந்தானா அது மாயந்தானா சொல்லுங்க
ஞாயந்தானா தாய்க்குலமே மாயந்தானா

முந்தானைய நான் புடிச்சேன் முந்திரி தோப்புல
அந்த சுந்தரி பேச்சுல
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people