Song lyrics

Munnoru Naalil Lyrics

முன்னொரு நாளில் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Dheenadhayalan
Year
2021
Singers
Shakthisree Gopalan
Lyricist
Madhan Karky
Munnoru Naalil

Lyrics

Munnoru Naalil Lyrics

முன்னொரு நாளில்
நான் ஒரு பறவை
அழகிய காடு
சிறிதொரு கூடு

முன்னொரு நாளில்
நான் ஒரு பறவை
அழகிய காடு
சிறிதொரு கூடு

மேக மேகமாய் கனவு
எல்லை இல்லாத விரிவு….உ….
சிறகுகள் எந்தன் தோழிகள் போலே
சீறி பாய்வேன் வானின் மேலே

எங்கே அந்த வான்….
எங்கே அந்த நான்
எங்கே அந்த வான்
எங்கே அந்த நான்….ஓஒ ஹோ ஓ

கூடுதல் சிறகாய்
காதல் ஆனால்
கூடுதல் சிறகே கனமானால்
கூடுதல் சிறகாய்
காதல் ஆனால்
கூடுதல் சிறகே கனமானால்

அறிமுகம் இல்லா தோழ்விகள்
என் கைகுலுக்கி போனால்
கிழக்கையும் மறந்தேன்
இலக்கையும் மறந்தேன்

எங்கே அந்த வான்….
எங்கே அந்த நான்
எங்கே அந்த வான்
எங்கேஅந்த நான்….ஓஒ ஹோ ஓ

போதும் என்றேன்
போய் வா என்றாய்
பிரிந்தோம் கனவே
நீயும் சென்றாய்…..ஹா…..ஆ…..ஆ….
போதும் என்றேன்
போய் வா என்றாய்
பிரிந்தோம் கனவே
நீயும் சென்றாய்…..

மீண்டும் எந்தன் காட்டில்
எந்தன் சிறிய கூட்டில்
நேற்றின் வழிகள்
மறந்து வாழ்கிறேன்….ஏ….ன்…..

ஆயிரம் குஞ்சுகள் அங்கே
என்னை கனவாய் கொண்டனா
முன்னாள் பறவை என்னை பார்த்தே
பறக்க கற்றன

எங்கே அந்த வான்….
எங்கே அந்த நான்
எங்கே அந்த வான்
எங்கே அந்த நான்….ஓஒ ஹோ ஓ

முன்னொரு நாளில்
நான் ஒரும் பறவை
மீண்டும் விரித்தேன்
எந்தன் சிறகை

முன்னொரு நாளில்
நான் ஒரும் பறவை
மீண்டும் விரித்தேன்
எந்தன் சிறகை

மீண்டும் கண்ணில் கனவு
மீண்டும் நெஞ்சில் துணிவு

என்னை தடுக்க யாரும் இல்லை
காதல் இனியும் பாரம் இல்லை
கண்ணீர் என்னுள் மிச்சம் இல்லை
தோல்விகள் தழுவ அச்சம் இல்லை

இங்கே அந்த வான்….
இங்கே அந்த நான்
இங்கே அந்த வான்
இங்கே அந்த நான்….

இங்கே அந்த வான்….
இங்கே அந்த நான்
இங்கே அந்த வான்
இங்கே அந்த நான்….ஓஒ ஹோ ஓ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people