Lyrics
Vidiyum Varai Kathirupen Lyrics
விடியும் வரை காத்திருப்பேன் மறந்துவிடாதே
வேதனைக்கோர் அளவுமில்லை தவிக்கவிடாதே (விடியும்)
கொடுமையினால் காதல் அழிந்து விடாது
கோடை வெய்யில் தீண்டும் கடலும் சுடாது
கொடியதென்றால் காதல் கலை வளராது
கோட்டை கட்டும் மேகம் மலைதனை அசைக்காது (விடியும்)
நெருப்பிலிட்ட தங்கம் கருத்து விடாது
நிலவுக்கு திரைபோட நினைப்பது கூடாது
துரு பிடித்த உலகம் திருந்திட வழியேது
சூழ்ச்சியினால் நம்மை இனி பிரிக்க முடியாது (விடியும்)
People
Related People
3 people