Song lyrics

Anthaathi Lyrics

நீ அந்தாதி பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Govind Menon
Year
2018
Singers
Chinmayi
Lyricist
Karthik Netha
Anthaathi

Lyrics

Anthaathi Lyrics

பேரன்பே காதல்
உள்நோக்கி ஆடுகின்ற ஆடல்
சாதா...

ஆறாத ஆவல்
ஏதேதோ சாயல் ஏற்று திரியும் காதல்
ப்ரத்யேகத் தேடல்
தீயில் தீராத காற்றில்
புள் பூண்டில் புழுவில் உளதில் இலதில்..

தானே எல்லாமும் ஆகி நாம் காணும் அருவமே
இத்தியாதி காதல்
இல்லாத போதும் தேடும் தேடல்
சதா...

மாறாது காதல் மன்றாடும் போதும் 
மாற்று கருத்தில் மோதும்
மாளாத கூடல்
ஆ.. அக அகா.... அக அகா.... அகாககா...
ஆ.. அக அகா.... அக அகா.... அகாககா...

நாம் இந்த தீயில் வீடு காட்டும் தீக்குச்சி
நாம் இந்த காற்றில் ஊஞ்சல் கட்டும் தூசி 
நாம் இந்த நீரில் வழ்க்கை ஓட்டும் நீர் பூச்சி
நாம் இந்த காம்பில் காமத்தின் ருசி

காதல் கண்ணீரில் சிலந்தி
காதல் விண்மீனின் மெகந்தி
காதல் மெய்யான வதந்தி
காலம் தோறும் தொடரும் டயரி
காதல் தெய்வீக எதிரி
காதல் சாத்தானின் விசிரி
காதல் ஆன்மாவின் புலரி
வாழ்ந்து பெற்ற டிகிரி

ஓ... விடைகுள்ளே... வினாவெல்லாம்... பதுங்குதே... ஹா...

ஆ... கரைந்ததே... மறைந்ததே... முடிந்ததே... ஹா...

ஆ... கொஞ்சும் பூரணமே வா
நீ... கொஞ்சும் ஏழிலிசையே
பஞ்ச வர்ண பூதம் நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் ஆ... காதலடி ஈ...
காதலே காதலே தனி பெருந் துணையே
கூட வா கூட வா போதும் போதும் 

காதலே காதலே வாழ்வின் நீளம்
போகலாம் போக வா நீ...

ஆ... இடம்பரி... வலம்புரி...
சுயம்பு நீ... நீ...

ஆ.. அஆ... பிரகாரம் நீ... பிரபாவம் நீ...
பிரபாகம் நீ... நீ...

ஆ..கா... ஸ்ருங்காரம் நீ...
ஆங்காரம் நீ... ஓங்காரம் நீ... நீ...

நீ... அந்தாதி நீ... அந்தாதி நீ...
அந்தாதி நீ... நீ...

ம்...
தேட வேண்டாம்
முன் அறிவிப்பின்றி வரும் அதன் வருகையை
இதயம் உரக்க சொல்லும்

காதல்...
காதல் ஒரு நாள் உங்களையும் வந்து அடையும்
அதை அல்லி அணைத்து கொள்ளுங்கள்
அன்பாக பார்த்து கொள்ளுங்கள்
காதல் தாங்கும்
காதல் தயங்கும்
காதல் சிரிக்கும்
காதல் இனிக்கும்

காதல் கவிதைகள் வரையும்
காதல் கலங்கும்
காதல் குழம்பும்
காதல்... ஓரளவுக்கு புரியும்
காதல் விலகும்
காதல் பிரியும்

கதவுகளை மூடாமல் வழி அனுப்புங்கள்
காத்திருங்கள்
ஒரு வேலை காதல் திரும்பினாள்
தூரத்தில் தயங்கி நின்றாள்
அருகில் செல்லுங்கள் அன்புடன் பேசுங்கள்

போதும்...
காதல் உங்கள் வசம்
உள்ளம் காதல் வசம்
மாற்றங்கள் வினா
மாற்றங்களே விடை
காதல்...
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people