Song lyrics

Eppadi Eppadi Lyrics

எப்படி எப்படி பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Deva
Year
1994
Singers
S. P. Balasubramaniam
Lyricist
Vaali
Eppadi Eppadi

Lyrics

Eppadi Eppadi Lyrics

ஆண் : எப்படி எப்படி

ஆண்குழு : சமைஞ்சது எப்படி

ஆண்குழு : எப்படி எப்படி சமைஞ்சது எப்படி (இசை)

பெண் : சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி
சக்கரைவள்ளி கிழங்கு மாமா சமைஞ்சது இப்படி
முந்தாநாளு வானம் மாமோய் தூறல் போடும் நேரம்
ஊதாப்பூவு போல பூத்து உக்காந்தேனே ஓரம்

ஆண்குழு : அது எப்படி எப்படி

பெண் : ஹேங்..

ஆண்குழு : சமைஞ்சது எப்படி

பெண் : அஹா ஹா.. சக்கரைவள்ளி கிழங்கு
மாமா சமைஞ்சது இப்படி

***

ஆண் : சந்தையிலே சுத்துறயே எதுக்கு

பெண் : நீயும் ஜொல்லு விட்டு பார்த்திடனும் அதுக்காக

ஆண் : சில்லறையை கேட்குறயே எதுக்கு

பெண் : கடன் சொல்லி விட்டு போய்விடுவே அதுக்காக

ஆண் : என்னாட்டமா ஏழைக்கெல்லாம்
ரேட்டு ரொம்ப ஜாஸ்தி தான்

பெண் : அஹங்..

ஆண் : எல்லாத்தையும் இங்கேவுட்டா
சோறு தண்ணி நாஸ்தி தான்

பெண் : அட வெட்டியாக என்ன பேச்சு விலை வாசி ஏறிப்போச்சு
நானும் தானே வாழனும் பக்கம் வந்த மாமா
இதுக்கு பேரம் பேசலாமா அஹா ஹா..
பாக்கு பாய போட்டு படிப்பேன் பயாஸ்கோப்பு பாட்டு

ஆண்குழு : எப்படி எப்படி சமைஞ்சது எப்படி

பெண் : அஹா ஹா.. அப்படி அப்படி சமைஞ்சது அப்படி

***

ஆண் : சப்பரம் போல ஆடுறயே எதுக்கு

பெண் : நித்தம் சாமி வந்து ஏறிடனும் அதுக்காக

ஆண் : தொப்புளத்தான் காட்டுறயே எதுக்கு

பெண் : மாமன் பம்பரம் தான் விட்டுடனும் அதுக்காக

ஆண் : சும்மானாச்சும் பார்க்கும் போது
சூட்ட நீயும் ஏத்துற

பெண் : ஆஆ

ஆண் : சராயத்த கண்ணுல வச்சு
ஆளு மேல ஊத்துற

பெண் : அடகாய்ஞ்ச மாடு கம்புல தான்
பாய்ஞ்சது போல் தெம்புல தான்
நீயும் மேய பார்க்குற
மூட்ட தூக்கும் மாமோய்

ஆண் : ஹோய்..

பெண் : அழகு மானத் தூக்கலாமா
ஹேய் மாமன் வீரம் என்ன
அதத் தான் நானும் பார்க்கலாமா
சங்கதி எல்லாம் தெரிஞ்சும்
நீயேன் சொதப்புற இப்படி

ஆண் : ஆங் ஆகங்

பெண் : சங்கதி எல்லாம் தெரிஞ்சும்
நீயேன் சொதப்புற இப்படி

ஆண் : ஆங் ஆங்

பெண் : சொர்க்க வாசல் கதவு
உனக்கு கிட்ட தானே இருக்கு

ஆண் : போடோய்

பெண் : உள்ளே வந்து பாரு
கிடைக்கும் தேவைப் பட்ட சரக்கு

ஆண் : ஐய்யோ ஐய்யயோ

பெண் : எப்படி எப்படி அஹா ஹா..

ஆண்குழு: அது அப்படி அப்படி..

பெண் : ஹேய்..எப்படி எப்படி

ஆண்குழு : அது அப்படி அப்படி

ஆண் : அப்படி..ஹேய்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people