Song lyrics

Ovvoru Padalilum Lyrics

ஒவ்வொரு பாடலிலும் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
S. A. Rajkumar
Year
2000
Singers
P. Unnikrishnan
Ovvoru Padalilum

Video

Ovvoru Padalilum

Lyrics

Ovvoru Padalilum Lyrics

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வலியுருக்கு நெஞ்சே இசை நெஞ்சே

காதலின் கனவுகளை கண்ணீரின் நினைவுகளை
பாடல்கள் சுமந்துவரும் நெஞ்சே இசை நெஞ்சே

வெட்டோடு பொருந்தும் வார்த்தை எதுவென்று தாய் மொழி அறியும்
நெஞ்சோடு பொருந்தும் வாழ்கை எதுவென்று யாருக்கு தெரியும்
வலி போக எந்தன் பாடல் வார்த்தை கொண்டு வரும்

யாருக்கு மாலைகள் ஆவதென்று பூங்கொடிகள் பூக்கள் பூப்பதில்லை
யாருக்கு யார் சொந்தம் ஆவதென்று தேவதைகள் வந்து சொல்வதில்லை

விதியென்ற காட்டிலே திசை மாறும் வாழ்க்கையே
போகிற போக்கில் பாதைகள் கண்டு விடு

எண்ணம் போல வாழ்க்கையே எவருக்கும் வாய்ப்பதில்லை
வாழ்கை போல எண்ணம் கொள் வாழ்வது துயரமில்லை

ரோஜாவின் கண்ணீர் தானே அத்தராய் வாசம் கொள்ளும்
கண்ணோடு பொறுமை காத்தால் காலம் பதில் சொல்லும்

பந்தங்கள் பாசங்கள் என்பதெல்லாம் தேகங்களை நம்பி வாழ்வதில்லை
உயிர் கொண்ட வேர்களின் ஆழங்களில் காதல் வந்து என்றும் காய்வதில்லை

உருவங்கள் தாண்டியும் உள்ளங்கள் வாழுமே
அண்டம் மறையும் அன்பே நித்தியமே

எந்த மேடை என்பதை அன்பே மறந்துவிடு
ஏற்றிக்கொண்ட பாத்திரம் அதிலே கரைந்துவிடு

நீர் கொண்ட மஞ்சள் வாழ்க நிழல் தந்த சொந்தம் வாழ்க
கல்யாண மாலை நனைத்த கண்ணீர் துளி வாழ்க

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு
உள்ளுக்குள் வலியிருக்கு நெஞ்சே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people