Song lyrics

Urave Urave Uyirin Lyrics

உறவே உறவே உயிரின் பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
Shankar-Ganesh
Year
1988
Singers
S. P. Balasubramaniam, Vani Jayaram
Lyricist
Vaali

Lyrics

Urave Urave Uyirin Lyrics

பெண் : உறவே உறவே உயிரின் உயிரே
அழகே அருகே வா கண்ணாளா வா
உறவே உறவே உயிரின் உயிரே
அழகே அருகே வா கண்ணாளா வா

ஆண் : புத்தனைப் போலே சித்தனைப் போலே
இதுவரை வாழ்ந்தேனே
கண்மணி உன்னை கண்டது நானே
கண்ணன் ஆனேனே

ஆண் : அங்கங்கள் எங்கெங்கும் எத்தனை மச்சங்கள்
எண்ணுங்கள் என்றேதான் சொல்லுது எண்ணங்கள்
பெண் : வண்ணத்தின் முத்தங்கள் காதலின் சின்னங்கள்
முத்தங்கள் தந்தாலே மாறிடும் வண்ணங்கள்

ஆண் : கண்ணான கண்ணே கல்யாண பொண்ணே
பெண் : தொடாதே முன்னே எல்லாமே பின்னே
ஆண் : உன்னை தீண்டுதே உள்ளம்
அணை தாண்டுதே வெள்ளம்

தழுவும் பொழுதே நழுவும் நிலவே
அழகே அருகே வா பெண் பூவே வா...
தழுவும் பொழுதே நழுவும் நிலவே
அழகே அருகே வா பெண் பூவே வா

பெண் : காதலிலே காதல் இல்லை துறவியை போலானேன்
மன்னவனைக் கண்டவுடன் மறுபடி ஆளானேன்
ஆண் : கண்ணே நான் நேற்று வரை காவியைக் கண்டேனே
கண்மணி நீ வந்தவுடன் காவியம் கண்டேனே

பெண் : கல்யாண சேதி உன் கண்கள் பேசும்
ஆண் : குற்றால தென்றல் இப்போது வீசும்
பெண் : ஊரில் கேட்கும் மேளமே இனி நல்ல காலமே

பெண் : உறவே உறவே உயிரின் உயிரே
அழகே அருகே வா கண்ணாளா வா
உறவே உறவே உயிரின் உயிரே
அழகே அருகே வா கண்ணாளா வா

ஆண் : புத்தனைப் போலே சித்தனைப் போலே
இதுவரை வாழ்ந்தேனே
கண்மணி உன்னை கண்டது நானே
கண்ணன் ஆனேனே
லாலி லாலாலா லாலி லலலல.....லாலி லாலா....
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people