Song lyrics

Ippavae Ippavae Lyrics

இப்பவே இப்பவே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Vidyasagar
Year
2008
Singers
Harini, Madhu Balakrishnan
Ippavae Ippavae

Lyrics

Ippavae Ippavae Lyrics

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே
 இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
 இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்
உள்ளச்சேதம் வந்து விட்டால் என்ன செய்வது
முள்ளைக் காலில் ஏற்றிக் கொண்டால் ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றிக் கொண்டேன் நித்தம் யுத்தம் தான்
சொல்லித் தீரா இன்பம் கண்டு எந்தன் நெஞ்சு கூத்தாட‌
மின்னல் கண்ட தாழை போல உன்னால் நானும் பூத்தாட‌
உன்னைக் கண்டேன் என்னைக் காணோம்
என்னைக் காண உன்னை நானும்
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்
இனி உந்தன் கையைப் பற்றிக் கொண்டே செல்ல விருப்பம்
நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்
உன்னைக் காண நானும் வந்தால் சாலை எல்லாம் பூஞ்சோலை
உன்னை நீங்கி போகும் நேரம் சோலை கூட தார்ப்பாலை
மண்ணுக்குள்ளே வேரைப் போலே
நெஞ்சுக்குள்ளே நீதான் நீதான்
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
கண்ணுக்குள்ள உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
கைவளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people