Song lyrics

Aagaya Vennilaave Lyrics

ஆகாய வெண்ணிலாவே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Ilaiyaraaja
Year
1990
Singers
K. J. Yesudas
Lyricist
Vaali
Aagaya Vennilaave

Video

Aagaya Vennilaave

Lyrics

Aagaya Vennilaave Lyrics

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் உண்டு
பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

பெண் : தென்பாண்டி மன்னன் என்று திரு மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண் : இளநீரூம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண் : கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண் : கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண் : நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

பெண் : தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
பாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண் : வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு கானம் கிளி பேச்சில் கேட்கக் கூடும்

பெண் : அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன

ஆண் : அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன

பெண் : இசை வீணை வாடுதோ இதமான கைகளை மீட்ட

ஆண் : சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

பெண் : மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

ஆண் : உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

பெண் : ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

ஆண் : அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people