Song lyrics

Poo Sirikkuthu Lyrics

பூ சிரிக்குது பூ சிரிக்குது பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Ilaiyaraaja
Year
2009
Lyricist
Vaali
Poo Sirikkuthu

Lyrics

Poo Sirikkuthu Lyrics

வேண்டாம் என்ற தேன் குயிலு
ஹே தானா துணைய தேடிக்கிச்சு
பூக்கள் வரும் கொம்பில் பூங்குருவி
ஹே புதுசா சோடி சேத்துக்கிச்சு

பூ சிரிக்குது பூ சிரிக்குது
அலையடிக்குது அலையடிக்குது
பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது
அலையடிக்குது அலையடிக்குது நிலவு கெறங்குது
வாசப் பூவு வீச நெஞ்சில்
ஆசப் பூ மெல்ல மெல்ல பூத்தது என்ன என்ன
மாலைக்கு நல்ல நாள் பாரு........(பூ சிரிக்குது)

நாள் மாறும் பூ மாறும் கை மாறும்
மாறாது அது போல என் வாழ்வும்
நான் போடும் பூ கோயில் படி ஏறும்
ஒனத் தேடி மனசோடும் தெருவோரம்

ஏ எப்போதும் என்னப் பத்தி ஏதோ
ஏங்கியே பாத்ததில்ல நானும்
இப்போ நடக்குறது எல்லாம்
காலத்தின் கட்டாயம் ஆகும்

மொத்தம் நான் முத்தத்தான்
பாடி வச்சேன் மொத்தத்தான்
ஓலக் குடிச ஓரம் அது ஓடி வரும் நேரம்
பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது

பொன்னாரம் பொன்னாரம் கழுத்தோடும்
பூத் தாலி பூத் தாலி தர வேணும்
மருதாணி மருதாணி வெரலேறும்
மனம் ஓடி வெரல் மேல வெளையாடும்

கன்னிப் பெண் எல்லாருக்கும் திருநாளு
கல்யாண ஊர்கோலம் வரும் நாளு
வெள்ளிக் கொலுசு துள்ளும் சிறு காலு
பூச் செண்டு தாளம் போடும் அதனோடு

மூக்குத்தி மூக்குத்தி வைரக் கல்லு மூக்குத்தி
கூரச் சேல ஆடும் என் குப்பம் ஆட்டம் போடும்
பூ சிரிக்குது பூ சிரிக்குது பொழுது மயங்குது
அலையடிக்குது அலையடிக்குது நிலவு கெறங்குது

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people