Song lyrics

Ival Yaaro Vaanvittu Lyrics

இவள் யாரோ வான் பாடல் வரிகள்

Last updated Jul 12, 2026

Music
Ilaiyaraaja
Year
1995
Singers
S. Janaki
Lyricist
Vaali
Ival Yaaro Vaanvittu

Lyrics

Ival Yaaro Vaanvittu Lyrics

இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
என்ன பேரோ வாய் விட்டு தேன் சிந்த பாடும் குயிலோ ஹோ

நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல என்றென்றும் வாழும் காதல்
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல நெஞ்சிக்குள் ஊறும் பாடல்

அடடா அதில் நான் மறந்தேன் என்னை
இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ ஹோ
இவள் யாரோ

காதல் வாழ்வு கானல் என்று நேற்று பேசினேன்
காதலே தெய்வீகம் என்று இன்று போற்றினேன்

காலை மாலை உன்னை எண்ணி உள்ளம் வாடினேன்
ஆசைகள் கை கூடும் இந்த நாளை வாழ்த்தினேன்

கண்ணே பசும்பொண்ணே வந்தேன் உந்தன் பின்னே

கண்ணா மணிவண்ணா உன் பேர் தினம் சொன்னேன்
உனை கண்டேன் கனிந்தேன்

இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
என்ன பேரோ வாய் விட்டு தேன் சிந்த பாடும் குயிலோ ஹோ

நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல என்றென்றும் வாழும் காதல்
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல நெஞ்சிக்குள் ஊறும் பாடல்

அடடா அதில் நான் மறந்தேன் என்னை
இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ

தேவன் உந்தன் தேறும் எந்தன் வாசல் வந்ததே
தேவியை கையோடு அள்ளி சொந்தம் கொண்டதே

நேரம் காலம் கூடும்போது நேசம் வென்றதே
நாயகி உன் தோற்றம் இந்த நெஞ்சில் நின்றதே

இன்பம் இந்த இன்பம் இன்னும் பல ஜென்மம்

பொங்கும் இனி பொஙும் செந்தேன் இதழ் எங்கும்
அதில் என்னை இழந்தேன்

இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ
என்ன பேரோ வாய் விட்டு தேன் சிந்த பாடும் குயிலோ ஹோ

நேற்றல்ல இன்றல்ல நாளை அல்ல என்றென்றும் வாழும் காதல்
நீ சொல்ல நான் சொல்ல நாளும் சொல்ல நெஞ்சிக்குள் ஊறும் பாடல்

அடடா அதில் நான் மறந்தேன் என்னை
இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ ஹோ
இவள் யாரோ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people