Song lyrics

Kalyaana Ponnu Lyrics

கல்யாணப் பொண்ணு பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
S. Balachander
Year
1962
Singers
L. R. Eswari
Lyricist
V. Lakshmanan
Kalyaana Ponnu

Lyrics

Kalyaana Ponnu Lyrics

கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு
கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்......
கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு
கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்......

குள்ள நரி மாப்பிள்ளே கூண்டு மேலே ஏறி
கம்பி எண்ணப் போறான் டுடும் டுடும் டும்......
கொலை செஞ்சு வாழ நெனச்சா
கடவுளுமே கூலி கொடுப்பார்..

தலை நெறையப் பாவம் சுமந்தா
தப்ப முடியாமத் தவிப்பார்
உண்மைக்கு நிச்சியமா உண்டாகும் ஜெயமே
இத உணராம தவறு செஞ்சா திண்டாட்டமே..(கல்யாண)

கள்ளத்தனமான காரியங்க செஞ்சா
பள்ளத்துல விழுவான் டுடும் டுடும் டும்......
மனசிலுள்ள புருஷன் உனக்கே
மால போட்டுத் தாலி கட்டுவான்

மணந்து கொள்ள நெனச்சவருக்கே
மனைவியாகும் காலம் வருமே...
அலங்காரம் செஞ்சுகிட்டு
அத்தான் கை கோத்துக்கிட்டு
அழகாக நடந்திடுவே....கொண்டாட்டமே....(கல்யாணத்)

Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people