Song lyrics

Nilavukku En Mel Lyrics

நிலவுக்கு என்மேல் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Viswanathan Ramamoorthy
Year
1962
Singers
P. B. Srinivas
Lyricist
Kannadasan

Lyrics

Nilavukku En Mel Lyrics

(இசை)
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது

கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம் கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
(இசை)

குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ

உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ
திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே
என்னை ஒருமுறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே
BitMusic
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
(இசை)

சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு ஆ…
சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு
உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு
உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு
BitMusic
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
BitMusic
முள்ளாய் மாறியது
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

3 people