Song lyrics

Aandondru Ponal Lyrics

ஆண்டொன்று போனால் பாடல் வரிகள்

Last updated Jul 13, 2026

Music
Viswanathan Ramamoorthy
Year
1962
Singers
P. B. Srinivas, S. Janaki
Lyricist
Kannadasan

Lyrics

Aandondru Ponal Lyrics

ஆண்டொன்று போனால்  வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே  வா வா வா வா
அழகுடன் இளமை  தொடர்ந்து வராது
இருக்கின்ற போதே வா வா வா
ஆண்டொன்று போனால்  வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே  வா வா வா வா

வாலிபம் என்பது தோட்டம்
வண்ண மலர்களின் கூட்டம்
வாடிய பின்னே மலராது
கண்களில் பொங்கும் வெள்ளம்
கலகலவென்னும் உள்ளம்
அடங்கிய பின்னே ஆடாது
ஆண்டொன்று போனால்  வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே  வா வா வா வா
அழகுடன் இளமை  தொடர்ந்து வராது
இருக்கின்ற போதே வா வா வா

என்னென்ன இன்பம் எங்கெங்கு உண்டோ
அங்கங்கு செல்வோம் வா வா வா
இரவென்ற ஊரில் உறவென்ற தேரில்
துயில் கொண்டு வாழ்வோம் வா வா வா
ஆண்டொன்று போனால்  வயதொன்று போகும்
அதற்கு முன்னாலே  வா வா வா வா
அழகுடன் இளமை  தொடர்ந்து வராது
இருக்கின்ற போதே வா வா வா
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people