Song lyrics

Nallai Allai Lyrics

நல்லையல்லை நல்லையல்லை பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
A. R. Rahman
Year
2017
Singers
Chinmayi, Sathyaprakash
Lyricist
Vairamuthu
Nallai Allai

Video

Nallai Allai

Lyrics

Nallai Allai Lyrics

வானில் தேடி நின்றேன்
ஆழி நீ அடைந்தாய்
ஆழி நான் விழுந்தால்
வானில் நீ எழுந்தாய்
என்னை நட்சத்திரக் காட்டில் அலையவிட்டாய்
நான் என்ற எண்ணம் தொலையவிட்டாய்
நல்லை அல்லை நல்லை அல்லை
நன்னிலவே நீ நல்லை அல்லை
நல்லை அல்லை நல்லை அல்லை
நள்ளிரவே நீ நல்லை அல்லை

ஒலிகளின் தேடல் என்பதெல்லாம்
மௌனத்தில் முடிகின்றதே.......
மௌனத்தின் தேடல் என்பதெல்லாம்
ஞானத்தில் முடிகின்றதே.......
நான் உனைத் தேடும் வேளையிலே நீ
மேகம் சூடி ஓடிவிட்டாய்.......
நல்லை அல்லை நல்லை அல்லை
நன்னிலவே நீ நல்லை அல்லை
நல்லை அல்லை நல்லை அல்லை
நள்ளிரவே நீ நல்லை அல்லை

முகை முகில் முத்தென்ற நிலைகளிலே
முகந்தொட காத்திருந்தேன்.......
மலர் என்ற நிலை விட்டு பூத்திருந்தாய்
மணம் கொள்ள காத்திருந்தேன்.......
மகரந்தம் தேடி நுகரும் முன்னே
வெயில் காட்டில் வீழ்ந்துவிட்டாய்.......
நல்லை அல்லை நல்லை அல்லை
நாறும் பூவே நீ நல்லை அல்லை
நல்லை அல்லை நல்லை அல்லை
முல்லை கொள்ளை நீ நல்லை அல்லை
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people