Song lyrics

Penne Neyum Pennaa Lyrics

பெண்ணே நீயும் பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
S. A. Rajkumar
Year
2003
Singers
Unni Menon
Lyricist
Pa. Vijay
Penne Neyum Pennaa

Lyrics

Penne Neyum Pennaa Lyrics

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
ஒரு மூன்றாம் பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த நெற்றி
பூக்கள் தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும் வெற்றி
பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்

புறா இறகில் செய்த புத்தம் புதிய மெத்தை
உந்தன் மேனி என்று உனக்கு தெரியுமா

சீன சுவரை போலே எந்தன் காதல் கூட
இன்னும் நீளம் ஆகும் உனக்கு தெரியுமா

பூங்கா என்ன வாசம் இன்று உந்தன் மீதுதெரியும்

தங்கம் என்ன வண்ணம் என்று உன்னை பார்க்க தெரியும்
காதல் வந்த பின்னாலே கால்கள் ரெண்டும் காற்றில் செல்லும்

கம்பன் ஷெல்லி சேர்ந்து தான் கவிதை எழுதியது
எந்தன் முன்பு வந்து தான் பெண்ணை நிற்கிறது

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம் காவியம்

மழை வந்த பின்னால் வானவில்லும் தோன்றும்
உன்னை பார்த்த பின்னால் மழை தோன்றுதே

பூக்கள் தேடி தானே பட்டாம் பூச்சி பறக்கும்
உன்னை தேடி கொண்டு பூக்கள் பறந்ததே

மின்னும் வெண்மை என்ன என்று மின்னல் உன்னை கேட்கும்

எங்கே தீண்ட வேண்டும் என்று தென்றல் உன்னை கேட்கும்
உன்னை பார்த்த பூவெல்லாம் கையெழுத்து கேட்டு நிற்கும்

நீ தான் காதல் நூலகம் சேர்ந்தேன் புத்தகமாய்
நீ தான் காதல் பூ மழை நனைந்தேன் பாத்திரமாய்

பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்

அரை நொடி தான் என்னை பார்த்தாய்
கோடி யுகமாய் தோன்ற வைத்தாய்
பனி துளியாய் நீயும் வந்தாய்
பாற் கடலாய் நெஞ்சில் தோன்றினாய்

பிரம்மன் செய்த சாதனை உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும் போது தான் மொழிகள் இனிக்கிறது
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people