Song lyrics

Kattre Poongattre Lyrics

காற்றே பூங்காற்றே பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
S. A. Rajkumar
Year
2003
Singers
K. S. Chithra
Lyricist
Pa. Vijay
Kattre Poongattre

Lyrics

Kattre Poongattre Lyrics

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா 
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா 
தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா 
வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா 
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா 

நதி என்பது ஓர் நாள் கடல் என்பதை சேரும் 
எப்போதுமே ஓடும் நதியாகலாம் 
ரோஜா செடி போலே நீ பூக்கலாம் இங்கே 
காற்றோடு போராடும் குணம் வேண்டுமே

அட உள்ளங்கையால் சூரியனை மூடிட முடியாதே 
ஒரு பறவை மோதி கோபுரம் தான் சாய்ந்திட கூடாதே

தோழனே தோழனே ஓவியன் கை வலி சித்திரம் ஆகுது 
ஒவ்வொரு வலியிலும் சாதனை உள்ளது

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா 
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா

புயல் வீசுமே என்று கரை ஓரமாய் நின்று 
அணை கட்டினால் அது ஓய்வதில்லை 
மழை தூறுமே என்று நடுவானிலே வந்து 
திரை கட்டினால் மழை முடிவதில்லை

எரிமலையின் மேலே தண்ணீர் ஊற்றி அணைத்திட முடியாது 
ஒரு மின்னல் கீற்றை நூலில் கட்டி நிறுத்திட இயலாது

உன்னை யார் வெல்வது சிப்பியின் பொறுமை தான் முத்து போல் மின்னுது 
இலைகளின் சக்தி தான் கனிகளை தாங்குது

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா 
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா 
தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா 
வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா 
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people