Lyrics
Avar Ninaivum En Ninaivum Lyrics
அவர் நினைவும் என் நினைவும்
ஆச்சு ஒன்றாச்சே
ஜோருதான் ஜோடி நான்
பார்த்து நின்றாச்சே.......(ஓ...ஓ....)
இமை ரெண்டும் மூடினால் திண்டாடுதே
ஏனோ என் இருதயம் துண்டாகுதே
காதல் இதானா காரணம் நானா
ஊறுதே ஊறுதே இன்பம் என்னுள்ளே...(ஓ...ஓ...)
கண்பட்ட நாள் முதல் காதல் எனும்
புண்பட்டு வாடுதே என்னுள்ளமும்
பேதைமை தானா காதலினாலே
ஏறுதே ஏறுதே போதை தன்னாலே...(ஓ...ஓ..)
அகமென்னும் வீணையில் இசை மீட்டினார்
ஆனந்த ஆரம்ப சுதி கூட்டினார்
மலர் விரிந்தாடும் காட்டினில் புல்புல்
ஏனின்ப கீதமே இசைக்க கண்டாலே....(ஓ..ஓ...)
People
Related People
2 people