Song lyrics

En Deivathukke Lyrics

என் தெய்வத்துக்கே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Srikanth Deva
Year
2005
Singers
Mukesh
En Deivathukke

Lyrics

En Deivathukke Lyrics

தெய்வத்துக்கே மாறு வேஷமா
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா

என் தெய்வத்துக்கே மாறு வேஷமா
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா
சொமந்த புள்ள பத்து மாசம் தான்
அடி பெத்த பின்னும் பாரம் ஆச்சு மா
ஆராரோ சொன்ன தாய் யாரோ
அட நான் யாரோ ஆனால் கோளாறோ
ஆராரோ சொன்ன தாய் யாரோ
அட நான் யாரோ ஆனால் கோளாறோ

என்ன விதி என்ன விதி டா
என் விதிய சொல்ல ஒரு வழி இல்லையா
அட என்ன சொல்ல என்ன சொல்லடா
சொந்தம் சொல்ல ஒரு கதி இல்லையா
செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா
அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா
செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா
அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா
அவ வாழும் போது தள்ளி வைப்போம்
செத்த பின்னே கொள்ளி வைப்போம்
பிள்ளையாக பெத்ததுக்கு என்ன பாவம் செஞ்சுபுட்டா டா
அவ என்ன பாவம் செஞ்சுபுட்டா டா

என் தெய்வத்துக்கே மாறு வேஷமா
மகாராணிக்கிங்கே ஏழை வேஷமா

பாசத்துக்கு பள்ளிக்கூடமா
அட பாடம் கற்று பாசம் வருமா
கல்லுக்குள்ளே சாமி வரும்டா
இங்கே சாமி பெத்தா கல்லு வரும்டா
அல்லும் பகலும் நம்ம அள்ளி வளப்பா
தூக்கம் முழிச்சி நித்தம் தூக்கம் கொடுப்பா
அல்லும் பகலும் நம்ம அள்ளி வளப்பா
தூக்கம் முழிச்சி நித்தம் தூக்கம் கொடுப்பா
அவ உசுர கொஞ்சம் கிள்ளிவெச்சி புள்ளையின்னு பெத்து வெச்சு
பத்து மாசம் காத்ததுக்கு பட்டினி தான் லாபமாச்சுடா
பட்டினி தான் லாபமாச்சுடா

என் தேவதைக்கே மாறுவேஷமா
சின்ன ராணிக்கிங்கே ஏழை வேஷமா
அண்ணன் முறை அப்பன் ஸ்தானம் தான்
அடி என்ன முறை இப்ப நானும்தான்
ஆராரோ ஆரி ஆராரோ
அடி நீ யாரோ இப்போ நான் யாரோ
ஆராரோ ஆரி ஆராரோ
அடி நீ யாரோ இப்போ நான் யாரோ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people