Lyrics
Ambuli Maamaa Vaa Lyrics
அம்புலி மாமா வா வந்து ஒரு
ஆசை மொழி சொல்ல வா
எங்கு நீ செல்லுகின்றாய் தனிமையில்
அங்கு நானும் வரவா...
பொன்னின் வட்டி போலே
வானந்தன்னில் மின்னிச் சுழலுகிறாய்
தின்ன ஏதும் தருவாய் – பசிக்குது
உன்னுடன் நான் வரவா
நட்சத்திரப் பெண்மணிகள் நடுவிலே
நாதனாய் வாழ்வதினால்
நாணமும் கொண்டனையோ
தாழ்ந்தோர் தம்முடன் பேசிடவே
மையிருள் சூழ்ந்ததுவே உனக்கே
அய்யோ பயமில்லையோ
கூட்டுத்துணை வருவேன் நல்ல நல்ல
பாட்டும் கதையும் படிப்பேன்......
People
Related People
2 people