Song lyrics

Saami Kitta Solli Lyrics

சாமிக்கிட்ட சொல்லி பாடல் வரிகள்

Last updated Jul 13, 2026

Music
Ilaiyaraaja
Year
1992
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyricist
Gangai Amaran
Saami Kitta Solli

Lyrics

Saami Kitta Solli Lyrics

ஆண் : { சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே } (3)

பெண் : முத்துமணியே
பட்டு துணியே ரத்தினமும்
முத்தினமும் சேர்ந்து வந்தச்
சித்திரமே

ஆண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே

பெண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே

ஆண் : கூவாத குயில்
ஆடாத மயில் நானாக
இருந்தேனே பூவோடு
வரும் காற்றாக எனை
நீ சேரத் தெளிந்தேனே

பெண் : ஆதாரம் அந்த
தேவன் ஆணை சேர்ந்தாய்
இந்த மானை

ஆண் : நாவார ருசித்தேனே
தேனை தீர்ந்தேன் இன்று
நானே

பெண் : வந்தத் துணையே
வந்து அணையே

ஆண் : அந்த முல்ல
சந்திரனை சொந்தம்
கொண்ட சுந்தரியே

பெண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே

ஆண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே

பெண் : முத்துமணியே
பட்டு துணியே

ஆண் : ரத்தினமும்
முத்தினமும் சேர்ந்து
வந்தச் சித்திரமே

பெண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே

ஆண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே

பெண் : காவேரி அணை
மேலேறி நதி ஓடோடி
வரும் வேகம் பூவான
எனை நீ சேரும்விதி
மாறாத இறை வேதம்

ஆண் : பூலோகம் இங்கு
வானம் போலே மாறும்
நிலை பார்த்தேன்

பெண் : வாழ்நாளில்
சுகம் தான் இது போலே
வாழும் வழி கேட்டேன்

ஆண் : வண்ணக் கனவே
வட்ட நிலவே

பெண் : என்ன என்ன
இன்பம் தரும் வண்ணம்
வரும் கற்பனையே

ஆண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே

பெண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே

ஆண் : முத்துமணியே
பட்டு துணியே

பெண் : ரத்தினமும்
முத்தினமும் சேர்ந்து
வந்தச் சித்திரமே

ஆண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே

பெண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people