Song lyrics

Chitthirai Nilavu Lyrics

சித்திரை நிலவு பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
A. R. Rahman
Year
1994
Singers
Minmini, Jayachandran
Lyricist
Vairamuthu
Chitthirai Nilavu

Lyrics

Chitthirai Nilavu Lyrics

சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே

அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு அது வேருக்கு தெரியும்
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு அது சேலைக்கு தெரியும்

சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே

அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு அது வேருக்கு தெரியும்
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு அது சேலைக்கு தெரியும்

வண்ண வண்ண வானவில் ஒன்று வானில் வந்தால் ஊருக்கு தெரியும்
கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள காதல் வந்தால் யாருக்கு தெரியும்

மேகங்களில் எத்தனை துளியோ மின்னல் பெண்ணா யாருக்கு தெரியும்
மோகம் கொண்ட பெண் யாரென்று முத்தம் தரும் சாமிக்கு தெரியும்

நிலா எது விண்மீன் எது நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும்
நாணம் எது ஊடல் எது நானும் கண்ட புள்ளிக்கு தெரியும்

சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே

அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு அது வேருக்கு தெரியும்
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு அது சேலைக்கு தெரியும்

மரங்களில் எத்தனை பழமோ பழம் உண்ணும் பறவைகள் அறியும்
பழங்களில் எத்தனை மரமோ ஊரில் இங்கே யாருக்கு தெரியும்

எந்த உறை தன் உறை என்று உள்ளே செல்லும் வாளுக்குத் தெரியும்
எந்த இடை தன் இடையென்று எட்டி தொடும் ஆளுக்கு தெரியும்

நிலாவிலே காற்றே இல்லை இது எத்தனை பேருக்கு தெரியும்
காதல் வந்தால் கண்ணே இல்லை காதல் கொண்ட யாருக்கு தெரியும்

சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே

அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு அது வேருக்கு தெரியும்
இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு அது சேலைக்கு தெரியும்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

7 people