Song lyrics

Chinna Chinna Kanamma Lyrics

சின்ன சின்ன கண்ணம்மா பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Deva
Year
1997
Singers
Harini
Chinna Chinna Kanamma

Lyrics

Chinna Chinna Kanamma Lyrics

சின்ன சின்ன கண்ணம்மா
எண்ணி ரெண்டு வருஷமா
சின்ன சின்ன கண்ணம்மா எண்ணி ரெண்டு வருஷமா
உன்ன எண்ணி பூத்திருக்கா
புத்தம் புது பூவால நித்தம் ஒரு பூமாலை
கட்டி வெச்சு காத்திருக்கா
தொண்ட குழிக்குள் நூறு நெனைப்பு
நான் சொல்ல தவிப்பு
ஏ உல்லாச குயிலே நீயாச்சும் வாய் பேசு
உன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாரேன் தங்க காசு
சின்ன சின்ன கண்ணம்மா

பல்லு தேய்க்க தெரியாது தேய்ச்சு விட்டதும் நீதான்
பாவாடைக்கு நாடாவ கட்டி விட்டதும் நீதான்
அங்கங்கே மருதாணி அப்பி விட்டதும் நீதான்
நான் ஆளான அந்நேரம் அங்கே நின்னதும் நீதான்
மஞ்ச தண்ணி எதுக்கு நீதான் நீதான் நீயேதான்
மாமங்காரன் எதுக்கு நீதான் நீதான் நீயேதான்
மாராப்பு செரி செஞ்ச மகராசன் நீயேதான்
என் நெத்தியில பொட்டு வெச்ச ஒத்த வெரல் நீதான்
சின்ன சின்ன கண்ணம்மா

என்னைப்போல உன் மேல ஆசை வெச்சவ இல்ல
உன்னைப்போல உள்ளூரில் மீசை வெச்சவன் இல்ல
அத்தானே உனக்கும் நான் தாலி கட்டப்போறேன்
அய்யேழு நாளோடு முழுகாம போறேன்
என்ன தரடா நீ இரவும் பகலும் நிறைவாக
மாதம் ஏழு போக வளவி போட வருவாக
கண்ணால நம் மீது கண் வைக்க போராக
உன்ன நானும் பொத்தி வைப்பேன் மண்ணுக்குள்ள வேறாக
சின்ன சின்ன கண்ணம்மா எண்ணி ரெண்டு வருஷமா
உன்ன எண்ணி பூத்திருக்கா
புத்தம் புது பூவால நித்தம் ஒரு பூமாலை
கட்டி வெச்சு காத்திருக்கா
தொண்ட குழிக்குள் நூறு நெனைப்பு
நான் சொல்ல தவிப்பு
ஏ உல்லாச குயிலே நீயாச்சும் வாய் பேசு
உன் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாரேன் தங்க காசு
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people