Song lyrics

Ennai Kaanavillaiye Lyrics

எனைக் காணவில்லையே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
A. R. Rahman
Year
1996
Singers
S. P. Balasubramaniam
Lyricist
Vaali
Ennai Kaanavillaiye

Video

Ennai Kaanavillaiye

Lyrics

Ennai Kaanavillaiye Lyrics

அன்பே அன்பே…

அன்பே… அன்பே

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா என் வாசல்தான்
வந்தால் வாழ்வேனே நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே
ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக்கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்

நான் என்று சொன்னாலே நான் அல்ல நீ தான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர் கூடத் தீ தான்
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா என் வாசல்தான்
வந்தால் வாழ்வேனே நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people