Song lyrics

En Kannukoru Lyrics

என் கண்ணுக்கொரு பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
K. Bhagyaraj
Year
1989
Singers
S. Janaki, S. P. Balasubramaniam
Lyricist
Vaali
En Kannukoru

Video

En Kannukoru

Lyrics

En Kannukoru Lyrics

ஆண் : என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்
உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான்

பெண் : உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்

ஆண் : ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன்
தினம் ஆராரோ ஆரிரோ நான் பாடுவேன்
இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்

பெண் : உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான்
என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்

***

பெண்குழு : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ (இசை)

ஆண் : உச்சி வெய்யில் வேளை நீ நடக்க
பிச்சிப் பூவ நானும் பாய் விரிக்க

பெண் : உச்சி முதல் பாதம் நான் சிலிர்க்க
உள்ளத்திலே ஆசை ஊற்றெடுக்க

ஆண் : முக்குளிக்க நானும் ஏங்கறேன்
முத்தெடுக்க நேரம் பார்க்குறேன்

பெண் : கொஞ்சம் பொறு இரவாகட்டும்
வெக்கமது விலகி ஓடட்டும்

ஆண் : எப்பம்மா எப்பம்மா காத்திருக்கேன்

பெண் : மொட்டுத்தான் விட்டு தான் பூத்திருக்கேன்

ஆண் : என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்

பெண் : என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்

ஆண் : ஹேய் தந்தனா தானனே தந்தன்னா
தானானேனே தந்தன்னா

பெண்குழு : ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : ஹேய் தந்தனா தானனே தந்தன்னா
தானானேனே தந்தன்னா

பெண்குழு : ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : தனன தானே தானானே

பெண்குழு : ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : தன்ன னானே தன்னானே

பெண்குழு : ஹேய் ஹேய் ஹேய்

***

பெண் : பள்ளியறை பாட்டை நீ படிக்க
பக்க மேளம் போல நான் இருக்க

ஆண் : தட்டுறப்ப தாளம் திறந்திருக்க
தட்ட தட்ட மோகம் வளர்ந்திருக்க

பெண் : கொஞ்சுறப்போ தேகம் நோகுமா
கொஞ்சம் கொஞ்சம் காயம் ஆகுமா

ஆண் : காயத்துக்கு களிம்பு பூசவா
ஆறும்வரை விசிறி வீசவா

பெண் : அம்மம்மா அம்மம்மா ரொம்ப வேகம்

ஆண் : என்னம்மா பண்ண நான் இன்ப தாகம்

பெண் : உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான்

ஆண் : உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான்

பெண் : ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன்
தினம் ஆராரோ ஆரிராரோ நான் பாடுவேன்
இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்

ஆண் : என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான்

பெண் : என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people