Song lyrics

Rajathi Raja Un Lyrics

ராஜாதி ராஜா பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Ilaiyaraaja
Year
1992
Singers
S. P. Balasubramaniam, Swarnalatha, Vaali
Lyricist
Vaali
Rajathi Raja Un

Lyrics

Rajathi Raja Un Lyrics

பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ஆண் : மாய ஜாலம் என்ன மையல் கொண்டு
நீயும் நாளும் ஆட்டம் போடவா

பெண் : நேரம் காலம் என்ன நேசம் கொண்டு
நீயும் காதல் தோட்டம் போடவா

ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ

பெண் : பூமேனி கொண்டாடும் வெண் பனி
என்னாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

***

ஆண் : மான் கூட்டம் மீன் கூட்டம் வேடிக்கை பார்க்கின்ற
கண்ணிரண்டிலே என்ன மயக்கம்

பெண் : மாமாங்கம் ஆனாலும் மன்னா உன் மார் சேர்ந்து
சின்ன மலர் தான் சிந்து படிக்கும்

ஆண் : கையோடு கை சேரும் கல்யாண வைபோகம்
கண்டு களிக்கும் காலம் பிறக்கும்

பெண் : மேள சத்தம் கேட்பதெந்த தேதியோ

பெண்குழு : லால லால லால லால லால லா

ஆண் : தேவனுக்கு சொந்தம் இந்த தேவியோ

பெண்குழு : லால லால லால லால லால லா

பெண் : காதும் காதுமாய்

ஆண் : காதல் மந்திரம்

பெண் : ஓதுகின்ற மன்னன் அல்லவோ என்னாளும் இங்கு

ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

***

பெண் : நின்றாலும் சென்றாலும் பின்னோடு என்னாளும்
வந்த நிழலே வண்ண மயிலே

ஆண் : தொட்டாலும் பட்டாலும் முத்தாரம் இட்டாலும்
என்ன சுகமே என்ன சுவையே

பெண் : உன்மேனி பொன்மேனி இன்னாளும் என்னாளும்
என்னை மயக்க தன்னை மறக்க

ஆண் : ஓடை மீது ஓடம் போல ஆட வா

பெண்குழு : லால லால லால லால லால லா

பெண் : உன்னை அன்றி யாரும் இல்லை ஆட வா

பெண்குழு : லால லால லால லால லால லா

ஆண் : காதல் கன்னிகை

பெண் : காமன் பண்டிகை

ஆண் : காணுகின்ற காலம் அல்லவா என்னாளும் இங்கு

பெண் : ராஜாதி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ஆண் : மாய ஜாலம் என்ன மையல் கொண்டு
நீயும் நாளும் ஆட்டம் போடவா ஹஹா

பெண் : நேரம் காலம் என்ன நேசம் கொண்டு
நீயும் காதல் தோட்டம் போடவா

ஆண் : ஹே ராணி என்னோடு ஆடவா நீ
பூ மேனி கொண்டாடும் வெண்பனி

பெண் : என்னாளும் ராஜாத்தி ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும் பம்பரங்கள்

ஆண் : ரூபாப்பா..... ராபாப்பா....ராப பப்பா
ரூ. ரூ.. ரூ.. ரூ.. ரூ.. ரூ.. ரூடூரூ....ரூ
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people