Lyrics
Ammaa En Aasai Niraiverumaa Lyrics
அம்மா.....அம்மா என்னாசை நிறைவேறுமா
அம்மா என்னாசை நிறைவேறுமா
அன்னையே நீ எந்தன் கண் முன்னே வந்தொரு
ஆறுதல் சொல்லிடுவாயோ – உன்
அன்பை பொழிந்திடுவாயோ.....(அம்மா)
என் குல தெய்வம் உன்னையல்லால் வேறு
இல்லையென நினைத்தேனே இன்று
இன்னொரு தெய்வம் கண்டேனே ஏ....ஏ..
அம்மா அம்மா இன்று
இன்னொரு தெய்வம் கண்டேனே......(அம்மா)
உள்ளத்திலே ஒரு ஜோதி பிறந்தது
அம்மா......அம்மா.......அம்மா.......
ஒளியை மறைத்திடுவாயோ – அதன்
சுடரை அணைத்திடுவாயோ...(அம்மா)
People
Related People
3 people