Song lyrics

Udayatha Vennila Lyrics

உடையாத வெண்ணிலா பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Vidyasagar
Year
1996
Singers
Hariharan, K. S. Chithra, Vairamuthu, Vidyasagar
Lyricist
Vairamuthu
Udayatha Vennila

Video

Udayatha Vennila

Lyrics

Udayatha Vennila Lyrics

ஆ: உடையாத வெண்ணிலா
பெ: உறங்காத பூங்குயில்
ஆ: நனைகின்ற புல்வெலி
பெ: நனையாத பூவனம்
ஆ: உதிர்கின்ற ஒருமுடி
பெ: களைகின்ற சிறு நகம்
ஆ: ஷ்ரிங்கார சீண்டல்கள்
பெ: சில்லென்ற ஊடல்கள்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்..
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்..
ஆ&பெ: (உடையாத..)

ஆ: அந்தி மஞ்சள் மாலை
ஆளில்லாத சாலை
பெ:தலைக்கு மேலே போகும்
சாயங்கால மேகம்
ஆ: முத்தம் வைத்த பின்னும்
காய்ந்திடாத ஈரம்
பெ: எச்சில் வைத்த பின்னும்
மிச்சமுள்ள பானம்
ஆ: கன்னம் என்னும் பூவில்
காய்கள் செய்த காயம்
பெ: ப்ரியம் ப்ரியம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
ஆ&பெ: (உடையாத...)

பெ: கண்கள் செய்யும் ஜாடை
கழுத்தில் பூத்த வேர்வை
ஆ: அள்ளிச்செல்லும் கூந்தல்
ஆடை தூக்கும் காற்று
பெ: மொட்டு விட்ட பாகம்
தொட்டு பார்த்த சினேகம்
ஆ: முகத்தின் மீது ஆடை
மோதிச்சென்ற மோகம்
பெ: இரண்டு பேரை ஒன்றாய்
எழுதிப்பார்க்கும் இன்பம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்
ஆ: ப்ரியம் ப்ரியம்
பெ: ப்ரியம் ப்ரியம்
ஆ&பெ: (உடையாத..)
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people