Song lyrics

Nilavondru Kandean Lyrics

நிலவொன்று கண்டேன் பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
Ilaiyaraaja
Year
1984
Nilavondru Kandean

Lyrics

Nilavondru Kandean Lyrics

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்


கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்
பனித் தோட்டம் யாவும் அனலாக மாறும்

சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்
சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்

பூவுக்கு வாய்ப் பூட்டு என் சோகம் நீ மாற்று

என் வாழ்விலே தீபம் ஏற்று

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை
கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்


நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வை தானே

நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தை தானே

உடல்கள் வேறு உயிர் ஒன்று தானே
உடல்கள் வேறு உயிர் ஒன்று தானே

நான் இங்கு நானல்ல என் துன்பம் யார் சொல்ல

என் தெய்வமே நீ பெண்ணல்ல

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

கனவொன்று கண்டேன் உன் கண்களில்

கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை

கரைகின்ற கண் மை அது சொல்லும் உண்மை

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

2 people