Song lyrics

Eesan Mel Unakku ( Male ) Lyrics

ஈசன் மேல் உனக்கு பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
S. A. Rajkumar
Year
1993
Singers
Mano
Lyricist
Shanmuga Sithan
Eesan Mel Unakku ( Male )

Lyrics

Eesan Mel Unakku ( Male ) Lyrics

ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு
தலைவன் அவன்தானே தேவி
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு
தலைவன் அவன்தானே தேவி

தாயாவும் தந்தையாவும்
ஒன்றிணைந்து கூடி நிற்கும்
அம்மை அப்பனுக்கு என்றும் உன் துணையே

ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு
தலைவன் அவன்தானே தேவி
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு
தலைவன் அவன்தானே தேவி...

கயிலையில் இருப்பவனாம்
மூவுலகை ஆள்பவனாம்
அன்பாய் திகழ்பவனாம் பெரும்
கருணையுள்ளவனாம்
மந்திர மூர்த்தியாய் காட்சியும் தந்து
மார்க்கண்டேயனுக்கு ஆயுசை தந்து

மந்திர மூர்த்தியாய் காட்சியும் தந்து
மார்க்கண்டேயனுக்கு ஆயுசை தந்து
எமனை எதிர்த்து நின்று விரட்டி விட்ட
தலைவன் மோகம் உனக்கு தேவியே.....

ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு
தலைவன் அவன்தானே தேவி...

மூன்றாம் கண்ணைக் கொண்டு என்றும்
முக்காலம் அறிபவனாம்
தில்லையில் கோயில் கொண்டு
எல்லையில்லா மகிழ்வு கொண்டு

ஒளி நிலவை தலைக்கணிந்து
முழு முதல்வன் எனத் தெரிந்து
ஒளி நிலவை தலைக்கணிந்து
முழு முதல்வன் எனத் தெரிந்து
ஒரு பாகம் கொண்ட உமையாம் அவளின்
காதல் ஒரு கவிதை தேவியே...

ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு
தலைவன் அவன்தானே தேவி...
ஈசன் மேல் உனக்கு ஆசைதான் இருக்கு
தலைவன் அவன்தானே தேவி.....
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people