Song lyrics

Varam Tharum Vadivelan Lyrics

வரம் தரும் வடிவேலன் பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
S. A. Rajkumar
Year
1993
Singers
S. P. Balasubramaniam, K. S. Chitra
Lyricist
Shanmuga Sithan
Varam Tharum Vadivelan

Lyrics

Varam Tharum Vadivelan Lyrics

ஆண் : வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்
வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்

உமை பெற்ற மைந்தன் இந்த
உலகை ஆளும் வேந்தனவன்
உமை பெற்ற மைந்தன் இந்த
உலகை ஆளும் வேந்தனவன்

பெண் : வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்
உமை பெற்ற மைந்தன் இந்த
உலகை ஆளும் வேந்தனவன்..

ஆஆஆ...வடிவேலா வடிவேலா
வரம் தரும் வடிவேலா வடிவேலா....

ஆண் : சிரித்த முகத்துடனே சிவன்
அளித்த வரத்துடனே
திருச்செந்தூர் வீற்றிருக்கும்
எங்கள் சிங்கார வடிவேலன்

பெண் : சிரித்த முகத்துடனே சிவன்
அளித்த வரத்துடனே
திருச்செந்தூர் வீற்றிருக்கும்
எங்கள் சிங்கார வடிவேலன்

ஆண் : தோடுயர்ந்த மலையிலெல்லாம்
சேவல் கொடி பறக்க
பெண் : வேலெடுத்து நீயிருப்பாய்
ஆறுபடை சிறக்க
ஆண் : மலையேறி மயிலேறி எனை நாடி
ஓடோடி வருவானே வடிவேலனே

பெண் : வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்
உமை பெற்ற மைந்தன் இந்த
உலகை ஆளும் வேந்தனவன்..

பெண் : அருளும் கரத்துடனே
இருள் விளக்கும் திறத்துடனே
பிரணவத்தில் நிலைத்திருக்கும்
எங்கள் சிங்கார வடிவேலன்

ஆண் : அருளும் கரத்துடனே
இருள் விளக்கும் திறத்துடனே
பிரணவத்தில் நிலைத்திருக்கும்
எங்கள் சிங்கார வடிவேலன்

பெண் : விண்ணுயர்ந்த உலகிலெல்லாம்
தேவர்களும் வணங்க
ஆண் : அடியெடுத்து நீ கொடுத்தாய்
திருப்புகழும் மணக்க
பெண் : ஒளியாகி வெளியாகி அமுதாகி
தமிழாகி வருவானே வடிவேலனே...

ஆண் : வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்
பெண் : வரம் தரும் வடிவேலன்
வாழ வைக்கும் தெய்வம் அவன்

ஆண் : உமை பெற்ற மைந்தன் இந்த
உலகை ஆளும் வேந்தனவன்..
பெண் : உமை பெற்ற மைந்தன் இந்த
உலகை ஆளும் வேந்தனவன்..
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people