Song lyrics

Sirikkadhey Lyrics

சிரிக்காதே சிரிக்காதே பாடல் வரிகள்

Last updated Jul 17, 2026

Music
Anirudh Ravichander
Year
2016
Singers
Arjun Kanungo, Srinidhi Venkatesh
Lyricist
Vignesh Shivan
Sirikkadhey

Video

Sirikkadhey

Lyrics

Sirikkadhey Lyrics

உன் பேரில் என் பேரை சேர்த்து     
விரலோடு உயிர்க்கோடு கோர்த்து     
ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன?....     
என் நெஞ்சில் தீயே உள் எங்கும் நீயே     
கண் மூடும்போதும் கண் முன் நின்றாயே     
சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே     
அடிக்காதே அடிக்காதே அழகாலே அடிக்காதே     
நனைக்கத் தெரியாதா அடை மழையே நனைய தெரியாதா     
மலர் குடையே மறையத்தெரியாதா      
பகல் நிலவே என்னைத் தெரியாதா     
தன்னழகை நனைக்கத் தெரியாதா     
அடைமழையே நனையத்தெரியாதா     
மலர் குடையே மறையத்தெரியாதா      
பகல் நிலவே என்னைத் தெரியாதா      (உன் பேரில்)
     
மனம் விட்டு உண்மை மட்டும்      
உன்னோடு பேசிட வேண்டும்     
நீ கேட்கும் காதலை அள்ளி     
உன் மேல் நான் பூசிடவேண்டும்     
நான் காணும் ஒற்றைக் கனவை     
உன் காதில் உளறிட வேண்டும்     
எனை மீறி உன்னிடம் மயங்கும்      
என்னை நான் தடுத்திட வேண்டும்
     
கூடாதே கூடாதே இந்நாள் முடியக் கூடாதே
போகாதே போகாதே எனை நீ தாண்டிப்போகாதே
     
நெருங்காதே நெருங்காதே என் பெண்மை தாங்காதே     
திறக்காதே திறக்காதே என் மனதை திறக்காதே     
     
நனைக்கத் தெரியாதா அடை மழையே நனைய தெரியாதா
மலர் குடையே மறையத்தெரியாதா      
பகல் நிலவே என்னைத் தெரியாதா     
தன்னழகை நனைக்கத் தெரியாதா     
அடைமழையே நனையத்தெரியாதா     
மலர் குடையே மறையத்தெரியாதா      
பகல் நிலவே என்னைத் தெரியாதா………………
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people