Song lyrics

Aathoram Karuppu Maadu Lyrics

ஆத்தோரம் கருப்பு மாடு பாடல் வரிகள்

Last updated Jul 15, 2026

Music
Shankar-Ganesh
Year
1989
Singers
S. P. Sailaja
Lyricist
Idhaya Chandran
Aathoram Karuppu Maadu

Lyrics

Aathoram Karuppu Maadu Lyrics

ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு
வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா
ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு
வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா

செவப்பு சேவல் ஆச வச்சு கருத்தரிச்ச கருப்புக்கோழி
வெள்ள முட்டப் போடுறத கேட்டியா பாத்தியா
கேட்டியா..ஆஆஆ....பாத்தியா...ஆஆஆ....

ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு
வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா
செவப்பு சேவல் ஆச வச்சு கருத்தரிச்ச கருப்புக்கோழி
வெள்ள முட்டப் போடுறத கேட்டியா பாத்தியா
ஹோய் கேட்டியா..ஆஆஆ....பாத்தியா...ஆஆஆ....

சூரியனும் சந்திரனும் என்ன ஜாதி என்ன மதம்
பூமிக்காக வானத்துல காயுது
ஊத்தெடுக்கும் ஆத்துத் தண்ணி
ஜாதி மதம் பார்ப்பதில்லை
ஆசையோடு தேசமெங்கும் ஓடுது

தெரிஞ்சிக்க வேணும் நீயும் புரிஞ்சுக்க வேணும்
துருப் புடிக்காம புத்திய தொடச்சுக்க வேணும்
ஆண் ஜாதி பெண் ஜாதி ரெண்டேதான் உண்டய்யா
தேதியப் பாத்துக்க மாலைய மாத்திக்க

ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு
வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா
செவப்பு சேவல் ஆச வச்சு கருத்தரிச்ச கருப்புக்கோழி
வெள்ள முட்டப் போடுறத கேட்டியா பாத்தியா
யோவ்....கேட்டியா..ஆஆஆ....பாத்தியா...ஆஆஆ....

வட்ட நிலா வானத்துல வந்து நிக்கும் நேரத்துல
கடலும் கூட வெறி எடுத்து பொங்குது
ஓடி வந்து தேனெடுக்கும் கோடி கோடி வண்டுக்காக
தோட்டத்துல பூக்களெல்லாம் ஏங்குது

என்ன பயம் உனக்கு எங்கிட்ட என்ன கத இருக்கு
கொட்டமடிப்பதற்கு கைவசம் திட்டம் பல இருக்கு
பொய் வேஷம் போடாதே வேணான்னு ஓடாதே
ஒத்திக பாத்துக்க மேளத்த வாசிக்க

ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு
வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா...ஹோய்....
செவப்பு சேவல் ஆச வச்சு கருத்தரிச்ச கருப்புக்கோழி
வெள்ள முட்டப் போடுறத கேட்டியா பாத்தியா

அட கேட்டியா..ஆஆஆ....பாத்தியா...ஆஆஆ....
ஹோய்....கேட்டியா..ஆஆஆ....பாத்தியா...ஆஆஆ....
கேட்டியா..ஆஆஆ....பாத்தியா...ஆஆஆ....
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

4 people