Song lyrics

Malligaiye Malligaiye Lyrics

மல்லிகையே மல்லிகையே பாடல் வரிகள்

Last updated Jul 18, 2026

Music
Shankar-Ganesh
Year
1988
Singers
S. P. Balasubramaniam
Lyricist
Idhaya Chandran
Malligaiye Malligaiye

Lyrics

Malligaiye Malligaiye Lyrics

மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே

எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே

கண்மணியே உன் வரவால்
மண்ணில் சொர்க்கமும் வந்திடலாம்
பாரத தாய் ஆசையுடன் தன்னை
உன்னிடம் தந்திடலாம்

மக்கள் உன்னை போற்றிடலாம்
வானும் உன் புகழ் பாடிடலாம்
நாடே உன்னை நம்பிடலாம்
நாளை உன் கொடி ஏறிடலாம்
வெண்ணிலவே கேளு ஞாயங்களை கூறு

மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே

கட்டிலிலே அள்ளித் தந்தாள்
தொட்டில் வந்ததும் தள்ளி நின்றாள்
கர்ப்பம் எனும் வாசலையே
ஏனோ தாய் அவள் பூட்டி வைத்தாள்

தந்தை நெஞ்சின் கற்பனைகள்
எல்லாம் பகலின் சொப்பனங்கள்
எந்தன் தேவை உன் வரவு
நாளை தெரியும் உன் முடிவு
வெண்ணிலவே கேளு ஞாயங்களை கூறு

மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே
எந்தன் சோலைவனம் நாளை பாலைவனம்
மல்லிகையே மல்லிகையே
மொட்டு விட்ட மல்லிகையே....
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

6 people