Song lyrics

Kuchi Kuchi Lyrics

குச்சிக்குச்சி ராக்கம்மா பாடல் வரிகள்

Last updated Jul 16, 2026

Music
A. R. Rahman
Year
1995
Singers
Hariharan, Swarnalatha
Lyricist
Vairamuthu
Kuchi Kuchi

Video

Kuchi Kuchi

Lyrics

Kuchi Kuchi Lyrics

குச்சிக்குச்சி ராக்கம்மா பொண்ணுவேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணுவேணும்
சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா

குச்சிக்குச்சி ராக்கம்மா பொண்ணுவேணும்
கூடசாலி ராக்கம்மா பொண்ணுவேணும்
சாதிசனம் தூங்கயில சாமக்கோழி கூவயில
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...


குச்சிக்குச்சி ராக்கம்மா வரமாட்டா - நீ
கொஞ்சிப்பேச பொண்ணு ஒண்ணு தரமாட்டா
சாதி சனம் தூங்கலையே சாமக்கோழி கூவலையே
குச்சிக்குச்சி ராக்கம்மா...கூடசாலி ராக்கம்மா...

காட்டு முயலுக்கு பனி பிடிக்கும் கானக்குயிலுக்கு வெயில் பிடிக்கும்
ஆணிவேருக்கு மண் பிடிக்கும் ஹே அப்பனுக்குப் பெண் பிடிக்கும்

அரசன் மகனுக்கு வாள் பிடிக்கும் அழுத குழந்தைக்குப் பால் பிடிக்கும்
புருஷன் ஜாமத்தில் கணைக்கயிலே பொம்பளைக்கு கிலி பிடிக்கும்

அல்லும் பகலுமே நனைந்தாலும் ஆத்து மீனுக்கா குளிரெடுக்கும்
அள்ளி அள்ளி நான் எடுத்தாலும் ஆனந்தப் பூவுக்கா பொன்மேனி வலிக்கும்

அ பொட்டப்புள்ள பெத்துக்கொடு...போதும் என்னை விட்டுவிடு
அ அ அ பொட்டப்புள்ள பெத்துக்கொடு...போதும் என்னை விட்டுவிடு
வெளிச்சம் எரியவிட்டு வெக்கத்தை அணைத்துவிடு

(குச்சிக்குச்சி)

ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா
ஹையா ஹையா ஹைய்யா ஹையா ஹையா ஹைஹைய்யா

சிறகு நீங்கினால் பறவையில்லை திரியை நீங்கினால் தீபமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது புரியவில்லை
உடலை நீங்கினால் உயிருமில்லை ஒலியை நீங்கினால் ஒளியுமில்லை
உன்னை நீங்கினால் நானில்லை உனக்கிது தெரியவில்லை

பூமி சுற்றுவது நின்றுவிட்டால் புவியில் என்றுமே மாற்றமில்லை
புருஷன் சுற்றுவது நின்றுவிட்டால் என்னாளும் பெண்வாழ்வில் ஏற்றங்கள் இல்லை

பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
பொத்தி வைத்த ஆச வந்து நெத்தியில துடிக்குது
தொட்ட இடம் பத்திக்கொளும் தூரத்தில் ஒதுங்கி நில்லு
Daily fan voting Bigg Boss Tamil 10 உங்கள் விருப்பமான போட்டியாளருக்கு வாக்களியுங்கள் Vote now

People

Related People

5 people